Vijay Net Worth: கோட்டையை பிடிப்பாரா ‘கோட்’ விஜய்.. 50வது பிறந்தநாள்.. இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: 200 கோடி, 275 கோடி என விஜய் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பள விவரமே தலை சுற்ற வைத்து வரும் நிலையில், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தளபதி விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு பற்றி அறிந்து கொண்டால் ஆச்சர்யத்தின் உச்சிக்கே ரசிகர்கள் சென்று விடுவார்கள். இந்தியாவில் மட்டுமில்லை ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் 'கோட்'டாக விஜய் உள்ளார் என்கின்றனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு பக்கம் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் நடத்தினால் நல்லா இருக்காது என நினைத்த தவெக தலைவர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து தவெக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டார்.

Vijay Vijay Birthday Net Worth GOAT

ஆனாலும், தனது ரசிகர்களுக்காக கோட் படத்தின் அப்டேட்கள் வெளியாக சம்மதம் தெரிவித்து ரசிகர்களையும் தொண்டர்களையும் கொஞ்சம் குஷிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் பிரம்மாண்ட பங்களாக்கள் மற்றும் சொகுசு கார்களின் தொகுப்பு என ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

அரை சதம் கடந்த விஜய்: ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் செய்யும் நாளாக நடிகர் விஜய் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என தவிர்த்து விட்டாலும், விஜய்க்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை வழக்கம் போல சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். இதுவரை சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த விஜய் அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மக்கள் பணியை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

275 கோடி சம்பளம்: இந்தியாவிலேயே விஜய் அளவுக்கு எந்தவொரு நடிகருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் ஷாருக்கான் வாங்கும் 250 கோடி சம்பளத்தையே பின்னுக்குத் தள்ளும் விதமாக 275 கோடி சம்பளத்தை தளபதி 69 படத்துக்கு வாங்கப் போகிறார் எனக் கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் அடுத்த படத்துக்கு 280 கோடி சம்பளம் கேட்பதே விஜய்யை மிஞ்சுவதற்காகத்தான் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Vijay Vijay Birthday Net Worth GOAT

சொகுசு கார்கள்: நடிகர் அஜித்தைத் தொடர்ந்து விஜய்யும் அலாதியான கார் பிரியர். அவரிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

600 கோடி சொத்து: நீலாங்கரை, பனையூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக பங்களாக்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி தனது சம்பளத்தை ஏற்றி வரும் விஜய் 600 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என்கின்றனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், கட்சி பணிகளுக்காக ஏகப்பட்ட செலவுகளை செய்ய ஆரம்பித்துள்ளார் என்றும் கூறுகின்றனர். ஆனால், விஜய்யின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X