எல்லாத்துக்கும் காரணம் விஜய்தான்.. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. சிரிப்ப அடக்க முடியல பாஸ்!

சென்னை: என்னதான் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் அரசியல் களத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆட்சியில் இருந்த திட்டங்கள் மட்டுமே மாணவர்களையும் இளைஞர்களையும் பெருமளவில் சென்று சேர்ந்தது. ஆனால் சரியோ, தவறோ பள்ளி மாணவர்கள், மாணவிகள் தொடங்கி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என பலரும் அரசியல் குறித்து ஆர்வமாக விவாதிக்க சம காலத்தில் முக்கிய காரணமாக இருப்பது நடிகர் விஜய் தான்.

சினிமா மூலம் அவருக்கு கிடைத்த பிரபல்யம் மற்றும் புகழ், சினிமா மூலம் அவர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்டவைகளை கணக்கில் வைத்து தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்து அவரது ரசிகர்களான மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் பெண்கள் என பலரும் தமிழ்நாடு அரசியல் குறித்த விவாதத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

Vijay Changed Everything Viral Meme on TVK Politics and Fan Reactions Takes Over Social Media

விஜய் தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து தேர்தல் களத்தில் அதிகாரத்தை வென்றெடுக்கலாம் என்றுதான் திட்டமிடுகிறாரே தவிர, தனது ரசிகர்கள் பட்டாளத்தை சரியான திசையில் அரசியல்வயப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன் வைத்தனர். ஆனாலும் விஜய் அது குறித்து எல்லாம் கவலைப்படாமல், முதலமைச்சர் என்ற அதிகாரத்தை நோக்கி சீராக சென்று அதை நெருங்கிவிட்டார். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அவர் தான், என்று உறுதியாகிவிட்டது.

அரசியல் பரபரப்பு: ஆனால் இன்னும் முதலமைச்சராக விஜய் பதவியேற்காத நிலையில், ஆளுநர் விஜய்யிடம் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் இல்லை என்று தெரிவித்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் உள்ளார். இப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசியல் சூழல் மணிக்கு மணி மாறிக் கொண்டே இருக்கிறது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது என்று, காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. அப்படி இருக்கும்போது, திமுக கூட்டணி கட்சிகள் பலரும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற பேச்சு பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

Vijay Changed Everything Viral Meme on TVK Politics and Fan Reactions Takes Over Social Media

விஜய் ரசிகர்கள் மனநிலை: இப்படி இருக்கையில், விஜய் ரசிகர்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது என்று இணையவாசி ஒருவர் பகிர்ந்த மீம், இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதாவது, " நிம்மதியா இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார்னு சுத்திட்டு இருந்த என்னை, நிமிஷத்துக்கு நிமிஷம் பாலிமர் செய்திகள், புதிய தலைமுறை, தந்தினு சுத்த விட்டானுங்க" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு விஜய் ரசிகர்களின் தற்போதைய மனநிலை என்று பலரும் கிண்டல் அடித்தாலும் கமெண்ட் செக்‌ஷனில், ஆமாம் அந்த ஐபிஎல் என்னதான் ஆச்சு என்று ஒருவர் கேட்க, அதற்கு மற்றொருவரோ, அது அவ்வளவுதான்.. முடிஞ்சுது என்று நக்கலாக பதில் அளித்துள்ளார். இது போன்ற போஸ்ட்கள் எல்லாம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X