சிம்புதேவன்- விஜய் படத்தின் தலைப்பு மாரீசன்?
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் மாரீசன் என்று செய்திகள் வெளியாகின.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அடுத்து விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
சிம்புதேவன் படத்திற்கு தற்போதைக்கு விஜய் 58 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாரீசன்
சிம்பு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மாயமான
ராமாயணத்தில் வரும் மாயமானின் பெயர் மாரீசன் ஆகும். சிம்பு தனது படத்தில் பேன்டஸி காட்சிகளை வைத்துள்ளதால் மாரீசன் என்ற தலைப்பை தேர்வு செய்ததாக கூறப்பட்டது.

இல்லையே
சிம்பு-விஜய் படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க அவர்களோ இல்லையே என்று தெரிவித்துவிட்டனர்.

ஸ்ருதி
சிம்பு படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலம் கழித்து ஸ்ரீதேவி தமிழ் படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











