செம க்ளிக்.. விஜய் எடுத்த அட்டகாச புகைப்படம்.. ஹேப்பியில் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன்!
சென்னை: தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குநர்களை ஒருசேர சேர்த்து வைத்து நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தான் க்ளிக் செய்தார் என்கிற அட்டாச அறிவிப்புடன் சேர்த்து இதனை ஷேர் செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சென்னக்கு திரும்பிய அட்லி
நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து லயன் எனும் தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து மும்பையில் முகாமிட்டு வந்த இயக்குநர் அட்லி தற்போது சென்னை திரும்பி உள்ளார்.

பீஸ்ட் இயக்குநர்
டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன், இயக்குநர் அட்லி மற்றும் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூவரும் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.

வாட் எ லைஃப்
வாட் எ லைஃப் எனும் வாசகம் அடங்கிய இடத்துக்கு அருகே இந்த மூவரும் செல்ஃபி எடுப்பது போல இருக்கும் புகைப்படத்தை தற்போது மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், ரசிகர்கள் அனைவரும் பொறாமைப்படக்கூடிய விஷயம் ஒன்றையும் அவர் அறிவித்து இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் எடுத்த போட்டோ
இந்த புகைப்படத்தை எடுத்தது வேறு யாருமில்லை தளபதி விஜய் தான் என "Picture courtesy actorvijay" என லோகேஷ் கனகராஜ் போட்ட கேப்ஷனை பார்த்து தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் விஜய்யின் செல்ஃபி புகைப்படம் அல்லது இவர்கள் விஜய்யை க்ளிக் செய்த புகைப்படம் வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

காதலர் தினத்தில்
தளபதி விஜய்யின் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளை புத்தாண்டில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், வரும் காதலர் தினத்தில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகும் மற்றும் தளபதி 66 படத்தின் பட பூஜை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











