Vijay: சங்கீதாவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட விஜய்? அப்பறம் ஏன் அப்படி சொன்னாரு?

சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக உருவெடுத்து உயர்ந்து நிற்கின்றார். 2024ஆம் ஆண்டு தமிழில் வெளியான 241 படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்றால் அது விஜய்யின் தி கோட் படம்தான். இந்தப் படம் ரூபாய் 455 கோடிகள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விஜய் தனது கடைசிப் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார். இப்படியான நிலையில் தனக்கு தனது தந்தை மிகவும் விரைவாகவே திருமணம் செய்து வைத்துவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய்யின் திருமணம் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா என்பது இப்போதுவரை பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. லண்டனில் உள்ள தொழிலதிபர் மகள்தான், சங்கீதா. இவர் விஜய்யின் தீவிர ரசிகை. பூவே உனக்காக படப்பிடிப்புத் தளத்தில்தான் விஜய் மற்றும் சங்கீதாவின் முதல் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

vijay ramesh khanna

அதன் பின்னர், ஆண்டுக்கு ஒருமுறை சங்கீதா சென்னைக்கு வருவதும், சென்னைக்கு வரும்போது எல்லாம், விஜய்யை வீட்டில் சந்திப்பதுமாக இருந்துள்ளார். 1997-98 காலகட்டத்தில் வீட்டிற்கு வந்த சங்கீதாவிடம், விஜய்யை திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனக் கேட்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். விஜய் பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விஜய்க்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 25. தற்போது இவர்கள் திருமணம் முடிந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ரமேஷ் கண்ணா: இப்படியான நிலையில் விஜய் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணாவின் மகன் திருமணத்திற்கு சென்றுள்ளார். அப்போது ரமேஷ் கண்ணாவின் மகனைப்பார்த்து, ' நீ எல்லாம் கொடுத்து வெச்சவன். எனக்குத்தான் என்னோட அப்பா சீக்கிரமே கல்யாணம் செய்து வச்சிட்டாரு' எனக் கூறியுள்ளார். இதனை ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

வற்புறுத்தல்: இதனை இணையவாசிகள், விஜய்யின் சொந்த வாழ்க்கையோடு முடுச்சு போட்டு என்னென்னமோ கூறி வருகின்றார்கள். அதாவது, விஜய் தனது திருமண முடிவை தான் எடுக்கவில்லை. பெற்றோர்களின் வற்புறுத்தலின்பேரில்தான், சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் விஜய் ஒரு நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார் எனவும் கூறி வருகின்றனர்.

vijay ramesh khanna

விருப்பம் இல்லை: விருப்பம் இல்லாமல், சங்கீதாவை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாலும், நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் சுமார் 8 மாத காலம் இருந்துள்ளது. அப்போது இருவரும் அதிகம் சந்தித்து பேசி, தங்களைத் தாங்களே நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். அதன் பின்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரமேஷ் கண்ணா பேட்டி: ஆனால் சங்கீதா, தற்போது விஜய்யுடன் இல்லை எனக் கூறப்படுகின்றது. அதாவது, சங்கீதா லண்டனில் இருப்பதாகவும், விஜய்க்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். அதனால்தான், விஜய் கட்சி தொடங்கிய எந்த நிகழ்விலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில்தான் ரமேஷ் கண்ணாவின் பழைய பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X