Don't Miss!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணம்.. சிறப்பு டிபி வெளியீடு.. ராஷ்மிகா, பிரேம்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து!
சென்னை : நடிகர் விஜய் தனது 30 ஆண்டுகால திரைப்பயணத்தின் கொண்டாடவுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே இந்தக் கொண்டாட்ட தருணத்தையொட்டி 30 ஆண்டுகள் விஜய்யிசம் என்ற சிறப்பு டிபியை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனிடையே விஜய்யின் இந்த சாதனைக்கு ராஷ்மிகா மந்தனா, பிரேம்ஜி, மாஸ்டர் மகேந்திரன், சிபி சத்யராஜ் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
’V’
டைட்டில்
விஜய்க்கு
வெற்றி
கொடுத்து
இருக்கிறதா?
வெற்றி
முதல்
வாரிசு
வரை
ஒரு
ரவுண்டப்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 1992ல் டிசம்பர் 4ம் தேதி வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார் விஜய். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையிலும் இவரது லுக் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை இவர் எதிர்கொண்டார்.

நெகட்டிவ் விமர்சனங்கள்
எண்ணெய் வழிந்த முகத்துடன் இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டார் என்ற விமர்சனங்களே இவருக்கு ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் தன்மீது வைக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களையே தன்னுடைய பாசிட்டிவ்வாக மாற்றிக் காட்டினார் விஜய். தற்போது இவரது முகத்தை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேவரைட்டாக உள்ளார் விஜய்.

சோதனைகளை சாதனையாக்கிய நாயகன்
தன்னுடைய சோதனைகளை எல்லாம் சாதனைக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டிய விஜய்க்கு ஆரம்பத்தில் படங்கள் சரியாக அமையாத நிலையில், தொடர்ந்து பூவே உனக்காக, லவ் டுடே உள்ளிட்ட சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இந்தப் படங்கள் விஜய்யின் கேரியரை பலப்படுத்தின. தொடர்ந்து விஜய் மாஸ் ஹீரோவாக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தினார்.

ரசிகர்களின் பேவரைட் ஹீரோ
தற்போது ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாக காணப்படுகிறார் விஜய். இவரது அடுத்தடுத்தப் படங்கள் இவருக்கு வசூல்ரீதியாக வெற்றிகளை கொடுத்து வருகின்றன. சிறப்பான இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் விஜய். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தபோதிலும் வசூலில் சொதப்பவில்லை.

வாரிசு படத்தில் விஜய்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணையவுள்ளார் விஜய்.

30 ஆண்டு கொண்டாட்டம்
இதனிடையே வரும் 4ம் தேதி திரையுலகில் இவர் தனது 30 ஆண்டு கொண்டாட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதையொட்டி சிறப்பு டிபியை உருவாக்கியுள்ளனர். இதில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் விஜய்யை காண முடிகிறது. 30 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி #30yearsofVijayism, #30yrsofvijayismspecialDP போன்ற ஹாஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன.

பிரபலங்கள் வாழ்த்து
இதனிடையே இந்த ஹாஷ்டேக்கை ஷேர் செய்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, சிபி சத்யராஜ், பிரேம்ஜி, மாஸ்டர் மகேந்திரன், பாடகர் கிரிஷ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து வாழ்த்துக்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றன.

ராஷ்மிகா மந்தனா வாழ்த்து
இந்த சிறப்பு டிபியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் இந்த 30 ஆண்டு திரைப்பயணம் குறித்து தான் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யை நினைத்து ஆச்சர்யம் அடைந்துள்ளதாகவும் மிகுதியான அன்புடன் உள்ளதாகவும் அவர் உருக்கம் தெரிவித்துள்ளார்.

மோஷன் போஸ்டர் வெளியிட்ட பிரேம்ஜி
இதேபோல தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சிறப்பு டிபியை பகிர்ந்து விஜய்க்கு பிரேம்ஜி அமரன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் விஜய்யின் 30 ஆண்டுகள் திரைப்பயணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு மோஷன் போஸ்டர் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மனம்கவர்ந்த ஹீரோ
ஒரு துறையில் அதிலும் போட்டிகள் நிறைந்த சினிமா துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக கடப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த 30 ஆண்டுகளையும் ஹீரோவாகவே அதிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவே கடந்து வந்துள்ள விஜய் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். இந்த தருணம் கண்டிப்பாக கொண்டாட்டத்திற்குரியதே.