அவர்தான் வேண்டும்.. அதிரடியாக கண்டிசன் போட்ட விஜய்.. தளபதி 65ல் நடக்க போகும் மாபெரும் டிவிஸ்ட்!
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் மிக முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் மிக முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

என்ன படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. அடுத்த ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும். சென்னையில் நடக்கும் கதை இது என்று குறிப்பிடுகிறார்கள். மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன அறிவிப்பு
இந்த நிலையில்தான் நடிகர் விஜய், சுதா கொங்காரா உடன் படம் நடிக்க முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் நடிகர் விஜய் சுதா கொங்காராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கொங்காரா சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். விஜயின் சினிமா கிராபில் முதல் பெண் இயக்குனராக சுதா கொங்காரா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மோசம்
ஆனால் இந்த படத்தில் நடிக்க விஜய் முக்கிய கண்டிஷன் போட்டு இருக்கிறார் என்கிறார்கள். அதன்படி பிரபல கோலிவுட் ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். விஜய நடிக்கும் மாஸ்டர் படத்தில், தற்போது வவிஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அதேபோல் பெரிய ஹீரோ ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய் கேட்டுள்ளார்.

வேறு என்ன
அதேபோல் வேறு முக்கியமான பாலிவுட் ஹீரோயின் ஒருவரை தமிழில் அறிமுகம் செய்ய வைக்கவும் முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள். பாலிவுட்டில் முக்கியமான படங்களில் நடித்து வரும் அவர் தமிழில் முதல் படத்தில் நடிக்க பிளான் செய்து வருகிறார். அவரை 65 படத்தில் நடிக்க வைக்க விஜய் கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

சுதா ஒப்புக்கொண்டார்
சுதா கொங்கரா இதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறுகிறார்கள். இதனால்தான் படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது . விஜய் கேட்ட அந்த கோலிவுட் ஹீரோ யார் என்று விவரம் வெளியாகவில்லை. பெரும்பாலும் இது அருண் விஜயாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











