Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரசிகரின் படத்தை பாராட்டிய விஜய்... அந்த ரசிகர் யார் தெரியுமா?
Recommended Video
சென்னை : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதிஷ், யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான 'சத்யா' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தெலுங்கில் கடந்த வருடம் வெளியான 'க்ஷணம்' படத்தின் ரீமேக் தான் இந்த 'சத்யா. தெலுங்கில் வெற்றிபெற்ற 'க்ஷணம்' படத்தை தமிழில் அப்படியே எடுத்திருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது 'சத்யா' திரைப்படம். சிறப்பான திரைக்கதையால் படம் விறுவிறுப்பாகச் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Vijay Anna called and congratulated me for the big success of #Sathya! #ProudFanMoment 😊🙏🏻
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) December 11, 2017
இந்நிலையில், ஒரு முன்னணி நடிகர் இப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல... விஜய் தான். சிபிராஜை போனில் அழைத்த விஜய், 'சத்யா' படத்தின் பெரிய வெற்றிக்காக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சிபிராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிபிராஜ், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுப் படங்கள் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் பாராட்டுவது விஜய்யின் வழக்கம். சமீபத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தையும் பாராட்டினார் விஜய்.