முறுவலா சுடசுட தோசை… அசத்திய தளபதி விஜய்... வைரலாகும் பழைய வீடியோ !
சென்னை : தளபதி விஜய்யின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்து அந்த வீடியோவை பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த அடக்கம் தான் உங்களை இவ்வளவு பெரிய இடத்துல உங்கார வைச்சிருக்கு என்று ரசிகர்கள் விஜய்யை புகழ்ந்து வருகின்றனர்.

நேர்காணல்
கொரோனா ஊரடங்கு பல விஷயத்தை திரும்பிபார்க்க வைத்துள்ளது என்று தான் சொல்லனும். இந்த ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்ஸ், தங்களுக்கு பிடித்த நடிகர் , நடிகைகளின் பழைய வீடியோக்கள் மற்றும் நேர்காணல்களுக்கு தற்போது புது உயிர் கொடுத்து அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
தோசை சுட்ட விஜய்
அந்த வீடியோவில், செய்தியாளர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு விஜய் பதிலளித்து வருகிறார், மேலும் செய்தியாளர், எங்களுக்கு ஒரு தோசை சுட்டு தரக்கூடாதா விஜய் என்று கேட்க...அவ்வளவுதேனா வாங்க நல்ல தோசையா ஒன்னு போட்டுத்தருகிறேன் என்று கூறிய தோசை போட்டு அசத்தி விடுகிறார்

முக்கியமானது
மேலும், பேசிய அவர், ஒரு கலைஞனுக்கு உடற்பயிற்சி முக்கியமான ஒன்று. நான் தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்வேன். அதற்கான உபகரணங்களை நான் வீட்டிலேயே வைத்துள்ளேன் என்று கூறினார். இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், இது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரால் பார்க்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.

படப்பிடிப்பு விரைவில்
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டு 2வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











