Vijay: விஜய் கேரக்டர் அப்படி இருக்கலாம்... இனிமேல் அதுமாதிரி பண்ணக் கூடாது... கூல் சுரேஷின் அட்வைஸ்

சென்னை: விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

நான் ரெடி எனத் தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், பலரும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது கூல் சுரேஷும் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

 Vijay: Cool Suresh advised that Vijay should not act in smoking scenes

விஜய்க்கு அட்வைஸ் பன்ண கூல் சுரேஷ்: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அனிருத் இசையில் 'நான் ரெடி' எனத் தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியிருந்தார். 2000 டான்ஸர்களுடன் ஷூட்டிங் செய்யப்பட்ட இந்தப் பாடலில் விஜய்யின் ஸ்டெப்ஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. அதேநேரம் நான் ரெடி பாடலின் லிரிக்ஸும், அதில் விஜய் புகைப் பிடிப்பதும் சர்ச்சையானது.

கடந்த சில வருடங்களாக தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்த விஜய், தற்போது மீண்டும் அப்படி செய்ததை பலரும் விமர்சித்தனர். அதேபோல், மாணவர்களை அழைத்து கல்வி விருது கொடுக்கும் விஜய், அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கூல் சுரேஷும் பேசி விஜய் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார்.

'நான் ரெடி' பாடல் லியோ படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூல் சுரேஷ் கூறியுள்ளார். அதேபோல், இப்பாடலில் விஜய் தம் அடிக்கும் காட்சிகள் அவரது கேரக்டருக்காக வைக்கப்பட்டிருக்கலாம். லியோவில் அவரது கேரக்டர் நெகட்டிவாக இருக்கும் என்பதால் அப்படி காட்சிகள் இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார். ஆனால், இதுக்கு மேல் இதுமாதிரியான காட்சிகளில் விஜய் நடிக்கக் கூடாது என கூல் சுரேஷ் அட்வைஸ் செய்துள்ளார்.

கூல் சுரேஷின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பலவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர். முன்னதாக 'நான் ரெடி' பாடலின் போஸ்டர் வெளியான போதே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டரில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். விஜய் நடிக்கும் படங்களை குழந்தைகளும் மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X