நம்மளோட சில பேர் வரலாம் இல்லையா.. அட இதுவும் காப்பியா?.. போயும் போயும் கிரண் வசனத்தை சுட்ட விஜய்?

சென்னை: ரீமேக் படங்களும் மற்ற படங்களில் இருந்து காட்சிகளை அப்படியே சுட்டும் தனது படங்களில் வைத்து நடித்து வந்த தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாகவும் கொள்கை தலைவர்களாகவும் பல தலைவர்களின் கருத்துக்களை காப்பி செய்தும், பல தலைவர்களை ரெஃபரன்ஸ் எடுத்துமே தனது கட்சியை தொடங்கி உள்ளார்.

இது இன்னொரு ரீமேக் படம் என சோஷியல் மீடியாவில் விஜய்யை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஆடியோ லாஞ்சுக்கே விஜய் தயார் செய்த ஸ்க்ரிப்டட் பேச்சை தான் பேசுவார் என்று ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், மாநாடு பேச்சும் அப்படி நடந்த ஒன்று தான் என்று கூறி வந்தனர்.

vijay tvk maanadu kiran


இந்நிலையில், நம்மளோட சில பேர் வரலாம் இல்லையா என வரிசையாக இல்லையா என்கிற டோனில் விஜய் பேசியதை ஏதோ படத்தில் பார்த்திருக்கிறோமே என நோண்ட ஆரம்பித்த நெட்டிசன்கள் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கிரண் நடித்த படத்தில் கிரண் பேசிய வசனத்தை தான் விஜய் சுட்டு விட்டார் என்று மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

விஜய்யின் 'இல்லையா’ பேச்சு: ”நம்மளோட சில பேர் வரலாம் இல்லையா.. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா.. அப்படி வரவங்களையும் நாம அன்போடு அரவணைக்கும் இல்லையா” என தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதுவும் காப்பி தான் என்று பங்கம் பண்ணியுள்ளனர்.

கிரணிடம் இருந்து காப்பி?: எஸ்ஜே சூர்யா, சிம்ரன், கிரண் நடிப்பில் வெளியான நியூ படத்தில் கிரண் தான் இப்படியொரு “இல்லையா” மாடுலேஷனை பயன்படுத்தி பேசியிருப்பார் எனக் கூறி அந்த காட்சியையும் எடிட் செய்து இணைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த காட்சியில் கிரண், “அவருக்குத்தான் வயசாகிடுச்சு இல்லையா.. நீங்க சின்ன வயசு இல்லையா.. புதுசா குடி வந்திருக்கேன் இல்லையா.. வலிக்கிறது இல்லையா.. மாட்டிண்டு இருக்கேன் இல்லையா” என்கிற காட்சியை நெட்டிசன்கள் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.


விஜயகாந்துக்கு செய்தது போலவே: விஜயகாந்த் அரசியலுக்கு வந்த காலத்தில் தான் சோஷியல் மீடியாவின் வளர்ச்சி அதிகரித்தது. ஏகப்பட்ட மீம்கள் மற்றும் ட்ரோல்களை போட்டு ஒரு கட்டத்தில் அவரை அரசியலை விட்டே காலி செய்யும் அளவுக்கு அவரது வளர்ச்சியை பிடிக்காத கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பின. எதிர்க்கட்சி தலைவராக மாறி கோட்டையில் ஜெயலலிதாவையே எதிர்த்து பேசிய விஜயகாந்த் அதன் பின்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அப்படியே தனது கர்ஜனைகள் எல்லாம் முடங்கி மறைந்தும் போய் விட்டார்.

விஜய் சமாளிப்பார்: நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைக்கும் இந்த சூழல் சோஷியல் மீடியா உச்சத்தில் இருப்பதால், விஜயகாந்துக்கு செய்ததை போலவே விஜய்யையும் ட்ரோல் செய்து அவரை காலி செய்து விட ஹேட்டர்கள் ரெடியாகி விட்டனர் என்றும் ஆனால், சோஷியல் மீடியாவை ஹேண்டில் செய்வதில் விஜய் வல்லவராக உள்ள நிலையில், அதிலிருந்து அவர் மீண்டு விடுவார் என்றே கூறுகின்றனர். தளபதி 69 படத்துக்குத்தான் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் என்றும் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்பதே சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X