Vijay: தலைவன் சரி இல்லாத கட்சி TVK.. விஜய்க்கு திராவிட கட்சிகள் 1000 மடங்கு மேல்.. இறங்கி அடிக்கும் பிரபலம்

சென்னை: நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு அவர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே, விஜய்க்கு மிகவும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர், விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி. இப்படி இருக்கையில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக இணைந்து திருமண விழாவில் பங்கேற்றதில் இருந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அவரது எக்ஸ் பக்கத்தில், " இனி த.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை . தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !! இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் ! அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் ! இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை ! " என்று பதிவிட்டுள்ளார்.

Actor Vijay Criticized by Prashanth Rangasamy After Trisha Controversy Says TVK Has No Future for People

1000 மடங்கு மேல்: அதேபோல் மற்றொரு பதிவில், " இவ்வளவு நாள் நான் விஜயுடன் நின்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் - அவர் மாற்று அரசியல் கொடுப்பார் என்று நம்பினேன் ! தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக கூட மாறாதவர் , எந்த மாற்று அரசியலை முன்னெடுத்து விட போகிறார் என்பதை இன்று உணர்ந்தேன் ! இவருக்கு திராவிட கட்சிகள் ஆயிரம் மடங்கு மேல் !!" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுகளும் இதற்கு முந்தைய பதிவுகளும் வேகமாக பரவி வருகிறது.

முட்டு கொடுக்க முடியாது: அதேபோல் விஜய்யை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, இதுக்கு எல்லாம் முட்டு கொடுக்க முடியாது விஜய் அண்ணா. விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல அண்ணா.நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு - அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும். இத யோசிக்க முடியலேன்னா , மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க ? சரி இல்ல" என்று பதிவிட்டதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actor Vijay Criticized by Prashanth Rangasamy After Trisha Controversy Says TVK Has No Future for People

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X