குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட விஜய்.. பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
சென்னை: மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆனது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
Recommended Video
அந்த பாடலுக்கு விஜய் வெறித்தனமாக நடனம் ஆடியிருப்பார். இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பின் போது அதே பாடலுக்கு குழந்தைகளுடன் நடிகர் விஜய் ந்டனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தின் "ஹலமதி ஹபிபோ" எனும் அரபிக் குத்து பாடலும் குழந்தைகளின் ஃபேவரைட் பாடலாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டான்ஸர்
தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே சூப்பராக டான்ஸ் ஆடுபவர்கள் பட்டியலில் இப்போதும் முதலிடத்தில் நடிகர் விஜய் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பாடலில் வரிகளே இல்லையே என ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னர் விஜய்யின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் அந்த பாடலை வேறலெவல் ஹிட்டாக்கினர்.

ஹலமதி ஹபிபோ
வாத்தி கம்மிங்கை தொடர்ந்து குழந்தைகளின் ஹாட் ஃபேவரைட் பாடலாக அரபிக் குத்து பாடல் மாறியுள்ளது. அனிருத் இசையில் எந்த பாடல் வெளியானாலும் அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து விடுகிறது. இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜய் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறார்.

குழந்தைகளுடன் விஜய் நடனம்
பீஸ்ட் படப்பிடிப்பு மொத்தமே ஒரு மால் செட்டில் தான் நடைபெற்றது. சன் டிவி ஆபிஸ் அருகே அமைக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட செட்டில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஷூட்டிங் பார்க்க வந்த சுட்டிஸ்களுடன் நடிகர் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

செம க்யூட்
குழந்தைகளின் ஃபேவரைட்டாகவே நடிகர் விஜய் இப்பவும் அவர்களை கவரும் விதமாகவே படங்களில் நடித்து வருகிறார். பெரிய இயக்குநர்கள், பெரிய கதை என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படங்களை மட்டுமே ஃபோகஸ் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், குழந்தைகளுடன் செம க்யூட்டாக அவர் நடனமாடியது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

அதிவேக வசூல்
வெறும் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நடிகர் விஜய் நிகழ்த்தி உள்ளார். விமர்சனங்களை கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்டர்டெயின்மென்ட்டோடு பார்க்கும் படமாக பீஸ்ட் உள்ள நிலையில், முதல் வாரத்திலேயே 200 கோடி வசூலை பீஸ்ட் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











