Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது என் ரசிகர்களுக்காக.. 1 நிமிடம் 20 நொடிகள் சிங்கிள் ஷாட்டில் நடனமாடிய விஜய்.. ஜானி மாஸ்டர் ஷாக்!
சென்னை: வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ஒரு நிமிடம் 20 நொடிகள் சிங்கிள் ஷாட்டில் நடிகர் விஜய் ஒரு டான்ஸ் ஆடியிருக்கிறார் என வாரிசு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஜானி மாஸ்டர் பேசியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு, ஷாம், சம்யுக்தா உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் உள்ளனர்.
'வாரிசு' இசைவெளியீட்டு விழா..ரசிகர்கள் தள்ளுமுள்ளு..போலீஸாருக்கு காயம்..களேபரமான நேரு ஸ்டேடியம்!

வாரிசு ஆடியோ லாஞ்ச்
டிசம்பர் 24ம் தேதி வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவித்த நிலையில், எந்தவொரு தடங்கலும் இன்றி திட்டமிட்டப்படி வாரிசு இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்த தருணங்கள் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் டிவியின் லோகோவும் வாரிசு பட இசை வெளியீட்டு விழா முழுவதும் நிறைந்திருக்கிறது. ஆனால், சோஷியல் மீடியாவிலேயே தற்போது ரசிகர்கள் லைவ் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

பேனர்கள் கிழிப்பு
வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு டிக்கெட் வாங்காமல் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் திடீரென உள்ளே நுழைய அலைமோதிய நிலையில், போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். நடிகர் விஜய்யின் பேனர்களை ரசிகர்கள் கோபத்தில் கிழித்த வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ரசிகர்கள் தள்ளு முள்ளு காரணமாக சில போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.

ராஷ்மிகாவுடன் நடனம்
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் நடிகை ராஷ்மிகாவுடன் ஸ்டேஜில் நடனமாடிய வீடியோக்களும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. அதன் பின்னர் பேசிய அவர் சொன்ன சூப்பரான விஷயம் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1 நிமிடம் 20 நொடிகள்
தனது ரசிகர்களுக்காக ஏதாவது ஒன்று வித்தியாசமாக பண்ண வேண்டும் என நினைத்த நடிகர் விஜய் பாடல் ஷூட்டிற்கு முன்பே தன்னை அழைத்து அந்த கடைசி 1 நிமிட 20 நொடிகள் ஃபாஸ்ட் பீட் போர்ஷனுக்கு சிங்கிள் ஷாட்டில் நான் ஸ்டாப் நடனமாடி விடுகிறேன் என கூறிவிட்டாராம். அதே போல அவர் ஆடியதை பார்த்து நான் ஷாக்காகிட்டேன் என ஜானி மாஸ்டர் பேசி உள்ளார்.