அமலா பாலுக்காக மதம் மாறுகிறேனா? - இயக்குநர் விஜய் விளக்கம்
சென்னை: அமலா பாலுக்காக நான் மதம் மாறுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் விஜய் விளக்கமளித்துள்ளார்.
அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இருவரின் நீண்ட நாள் காதலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.

அமலா பால் தனது படங்களை முடித்த பிறகும், விஜய் தனது சைவம் படத்தை முடித்த பிறகும் திருமண அழைப்பைத் தருவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்து மதத்தைச் சேர்ந்த விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது திட்டவட்டமாக மறுத்தார். இந்த செய்தி ஆதாரமற்றது என்றும், என்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவுமில்லை, அப்படி மாறும் எண்ணமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications