புல்லட் பைக்கில் முரட்டுத்தனமாய் நடிகர் விஜய் தேவரகொண்டா... ஹார்டின் விடும் ரசிகைகள் !
சென்னை : அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் தேவர கொண்டா.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவான நோட்டா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இப்பொழுது லைகர் என்ற படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா அதற்காக முரட்டுத்தனமாக உடம்பை ஏற்றி இருக்க புல்லட்டில் உட்கார்ந்துகொண்டு பீஸ்ட் மோடிற்கு மாறியுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் ஹார்டின் விட்டு வருகின்றனர்.

ஹிந்தியிலும் ரீமேக்
தென்னிந்தியாவில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் மோஸ்ட் வான்டட் நடிகராக உள்ளார். பெல்லி சூபுலு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவருக்கு அதன்பிறகு நடித்த அர்ஜுன் ரெட்டி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அர்ஜுன் ரெட்டி தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இரு மொழிகளிலும்
அர்ஜுன் ரெட்டி வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய நடிகராக மாறிய விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மையப்படுத்தி வெற்றியும் பெற்றது.

உடம்பை தாறுமாறாக ஏற்றி
இதுவரை தென்னிந்தியாவில் மட்டுமே மாஸ் காட்டி வந்த விஜய் தேவரகொண்டா ஹிந்திக்கும் செல்கிறார். அதிரடி இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கரண்ஜோகர், நடிகை சார்மி தயாரிப்பில் குத்துச் சண்டையை மையப்படுத்தி லைகர் என்ற படம் உருவாகி வருகிறது . தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகிவரும் இதில் குத்துச்சண்டை வீரராக விஜய் தேவர கொண்டா நடிப்பதற்காக உடம்பை தாறுமாறாக ஏற்றி உள்ளார். ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.

இளம் ரசிகைகள் ஹார்டின்
லைகர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் பாலபிஷேகம் செய்து கொண்டாடப்பட்ட நிலையில் இப்பொழுது முரட்டுத்தனமான போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரட்டி உள்ளார். கம்பீரத்திற்கு சற்றும் குறைவில்லாத புல்லட்டில் உட்கார்ந்துகொண்டு கட்டுமஸ்தான உடம்புடன் விஜய் தேவரகொண்டா எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இளம் ரசிகைகள் இடைவிடாது ஹார்டின் விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











