என்னது அடுத்த படமா? பட்டதே போதும் ஆள விடுங்கப்பா..தெறித்து ஓடிய விஜய் தேவரகொண்டா!

சென்னை : லைகர் பட தோல்வியால் இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் அடுத்தப் படமான ஜன கன மன திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்த லைகர் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருந்தார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகின இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி வெளியானது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

லைகர் படத்தின் கதை ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த குமரன்சன் ஆப் மகாலட்சுமி படத்தின் கதை தான். தன் அப்பா தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை மகன் போராடி பட்டத்தை வெல்கிறார். இதற்காக மும்பை வரும் விஜய்தேவகொண்டா, தாய் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து தெருவோரத்தில் டீ கடை நடத்துகிறார்.

மோசமான விமர்சனம்

மோசமான விமர்சனம்

பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் வெளியான முதல் காட்சியிலே மோசமான விமர்சனத்தை பெற்றது. நெட்டிசன்ஸ் பலர் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதை விட கொடுமையான விஷயம் வெற இல்லை என படுமோசமான விமர்சனம் எழுந்தது.

சம்பளத்தை திருப்பி கொடுத்தார்

சம்பளத்தை திருப்பி கொடுத்தார்

இந்த படம் தோல்வி அடைந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். பூரி கனெக்டஸ் வலுவாக மீண்டும் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் தேவரகொண்டா, தன் சம்பளத்தில் இருந்து 6 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளார். அதே போல இயக்குனரும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெறித்து ஓடிய விஜய் தேவரகொண்டா!

தெறித்து ஓடிய விஜய் தேவரகொண்டா!

இந்நிலையில், இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வந்த மற்றொரு படமான ஜன கன மன திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லைகர் படத்தின் தோல்வி காரணமாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ஜன கன மன படத்தை பிறகு பார்க்கலாம் என கூறி தட்டிக்கழித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜன கன மன படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X