மாலத்தீவில் ஜோடியா சிக்கிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா.. போட்டோவால் அம்பலத்துக்கு வந்த காதல் விவகாரம்!
சென்னை : நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிப்ரவரி 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
அதேபோல, ராஷ்மிகா மந்தானா நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி உள்ளது.

கீதா கோவிந்தம்
காதலர்களுக்கும் இளசுகளுக்கும் பிடித்த படமாக இருப்பது கீதா கோவிந்தம். இப்படத்தில் க்யூட்டாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தானா. அந்த படத்தில் விஜய்தேவர கொண்டாவுடன் காதல், ரொமான்ஸ் என அனைத்தும் பக்காவாக இருக்கும். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் ஜோடி போட்டு நடித்திருந்தனர்.

காதல் கிசுகிசு
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்ததால், மீடியாக்களின் கண்களில் சிக்கினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

இதுதான் வாழ்க்கை
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா மாலத்தீவில் கையில் சரக்கு பாட்டிலுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதில், ஒரு வருடம், நாம் அனைவரும் கடினமாக சிரித்தோம், அமைதியாக அழுதோம், இலக்குகளைத் துரத்தினோம், சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம். நாம் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும்... அதுதான் வாழ்க்கை என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வசமாக சிக்கினர்
விஜய் தேவரகொண்ட வாழ்த்து தெரிவித்த சிறிது நேரம் கழித்து ராஷ்மிகாவும் ஹாலோ 2023 என மட்டுமே பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவையும், ராஷ்மிகா மந்தனா ரிசார்ட்டின் குளத்தில் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து இருவரும் ஒரே இடத்தில் இருப்பதாக கூறி புயலை கிளப்பி விட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று சொன்னாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை.

காட்டி கொடுத்த கண்ணாடி
இதே போல கடந்த அக்டோபர் மாதமும் இவர்கள் இருவரும் மாலத்தீவு செல்ல தனித்தனி காரில் விமான நிலையம் வந்தாலும், ஒரே விமானத்தில் தான் மாலத்தீவு சென்றனர். அது மட்டுமில்லாமல், விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிக போட்டுக்கொண்டு போட்டோ எடுத்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டு வரும் போட்டோவையும்,ராஷ்மிகா கூலர் போட்டு எடுத்த போட்டோவை ஷேர் செய்து கண்ணாடி விஜய்க்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











