அல்லு அர்ஜுனை முந்திய விஜயதேவரகொண்டா.. இன்றைய டாப் 5 பீட்ஸ் வீடியோ!
சென்னை: நம்முடைய பிகே அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இன்றைய டாப் 5 பீட்ஸ் வெளியாகி உள்ளது.
Recommended Video
தெலுங்கு நடிகர் அகில் நடிக்கும் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கவிருந்த நிலையில், தற்போது கால்ஷீட் காரணமாக அவர் பிசியான நிலையில், ஹிப் ஹாப் ஆதி அந்த படத்திற்கு இசையமைக்க புக் செய்யப்பட்டுள்ளதாக முதல் பீட்டே டோலிவுட் பக்கம் சென்று கலெக்ட் செய்து கொண்டு வந்திருக்கிறார்.

இரண்டாவது சினிமா துணுக்காக இயக்குநர் ஷங்கர், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து புதிதாக ஆரம்பித்துள்ள ரெயின் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவது உறுதியான நிலையில், அந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி மாற்றப்பட்டுள்ளார் என்கிற தகவலை கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் தற்போது உருவாகி வரும் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி வில்லனாக இல்லாமல் முழுக்க முழுக்க ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நடிகைகளை போலவே நடிகர்களுக்கும் யார் அதிக ஃபாலோயர்கள் என்கிற போட்டி ஆரம்பித்துள்ளது. தென்னிந்தியாவில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகராக அல்லு அர்ஜுன் இருந்து வந்த நிலையில், புரி ஜெகநாத் இயக்கத்தில் லைகர் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய தேவரகொண்டா 13 மில்லியன் ஃபாலோயர்களை கடந்து நடிகர் அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் முந்தியுள்ளதாக மூன்றாவது ஹாட் அப்டேட்டையும் நம்ம பிகே கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் ஆஷிரம் பள்ளி ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்காத பிரச்சனை தொடர்பான செய்தியை 4வது பீட்டாக கொடுத்துள்ளார் பிகே.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நடந்த கோல்டு வார் முடிவுக்கு வந்து வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டதுகுறித்தும் அடுத்தபடியாக நடிகர் வடிவேலு லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் எனும் டைட்டிலில் நடிக்கப் போகிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











