பயத்தில் விஜய் தேவரகொண்டா.. அம்மாவிடம் உதவி எதிர்பார்ப்பு.. ஆனா, எல்லாம் சந்தோசமான விசயம் தான்!

விஜய் தேவரகொண்டா புதிய வீடு வாங்கியுள்ளார்.

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ், இந்தி என வளர்ந்து வருகிறது.

Vijay Devarakonda buys a new house

அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனால் விஜய்யின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து அவர் படம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்த நீக்கு மாத்திரமே செப்தா படம் விஜய் தேவரகொண்டாவின் தயாரிப்பு தான்.

இந்நிலையில் அவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.15 கோடியில் பெரிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் கிரகபிரவேச நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய், தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் இருக்கிறார். மேலும் அந்த பகிர்வில், "நான் ஒரு பெரிய வீடு வாங்கிவிட்டேன். அது எனக்கு பயத்தை தருகிறது. எங்கள் பயத்தை போக்கி, பாதுகாப்பான உணர்வை தரவேண்டியது அம்மாவின் கடமை. இதை அவர் வீடாக மாற்றுவார்", என குறிபிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X