அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா... ஹாப்பி பர்த்டே மாமியார்.. அசடு வழிந்த ரசிகைகள்!
ஹைதராபாத் : தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமாக உள்ளவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
நடித்த சில திரைப்படங்களிலேயே உச்சத்தை தொட்டிருக்கும் இவர் தெலுங்கு சினிமாவில் இப்போதைய காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஏராளமான பெண் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் தேவரகொண்டா தனது அம்மாவின் 50வது பிறந்த நாளை கொண்டாடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்த நிலையில் அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிய நிலையில் இவரது தீவிர பெண் ரசிகைகள் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உயரிய இடத்தை
மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உயரிய இடத்தை எட்டிய வெகுசில நடிகர்களில் தற்பொழுது மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

சிறிய கதாபாத்திரங்களில்
நடிகர் நானி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா பின் ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க "பெல்லி சூபுளு" இவருக்கு முதல் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

புகழின் உச்சியில்
"பெல்லி சூபுளு " திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற நிலையில், இவரின் அடுத்த திரைப்படமான "அர்ஜுன் ரெட்டி" இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியதோடு மாபெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது.

அர்ஜுன் ரெட்டி
ஆழமான காதல், அதில் உள்ள வலி என வித்தியாசமான காதல் களத்தில் உருவான "அர்ஜுன் ரெட்டி" திரைப்படம் இப்பொழுது இருக்கும் இளசுகளுக்கு ஏற்றவாறு உருவாகியிருந்த நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு திரைப் பிரபலங்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டது.

ரசிகைகளின் கூட்டம் அதிகமாயின
தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த இப்படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பலராலும் அறியப்பட்ட நிலையில் இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் பெண் ரசிகைகளின் கூட்டம் அதிகமாயின.

ஹாப்பி பர்த்டே மாமியார்
இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது அம்மாவின் 50வது பிறந்த நாளை வீட்டில் எளிய முறையில் கொண்டியதையொட்டி கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடிப்பதைப் போல அம்மாவுடன் இணைந்து கிரிக்கெட் ஆடிவாறு 50வது பிறந்தநாளை கொண்டாடியிருந்த வீடியோவை விஜய் வெளியிட்டதையடுத்து அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் பெண் ரசிகைகள் "ஹாப்பி பர்த்டே மாமியார்" என வெட்கப்பட்டுக்கொண்டே தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications