விஜய் தேவரகொண்டா சிவகார்த்திகேயன் இடையே சண்டை.. சமாதானம் பேச ஆள் இல்லை.. என்ன நடக்கிறது?

டைட்டில் பிரச்சனை ஒன்றின் காரணமாக தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே பெரிய பிரச்சனை நிகழ்ந்து வருகிறது.

Recommended Video

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம்- வீடியோ

சென்னை: டைட்டில் பிரச்சனை ஒன்றின் காரணமாக தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே பெரிய பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. இவர்கள் இடையே சமாதானம் பேச முக்கியமான தெலுங்கு நடிகர் ஒருவர் முயன்று வருகிறாராம்.

நடிகர் விஜய் தேவரகொண்டா வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் ஹிட் அடித்து வருகிறது.

இவர் நடித்து பிளாப் படங்கள் என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. பிளாக்பஸ்டர் படங்கள் அல்லது ஹிட் படங்கள் என்ற வகையிலேயே இவரின் படங்கள் வரவேற்பை பெற்று வருகிறது

சிவகார்த்திகேயன் எப்படி

சிவகார்த்திகேயன் எப்படி

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் சத்தமே இல்லாமல் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். படத்தில் கதை இருக்கிறதோ, காமெடி இருக்கிறதோ, நல்ல பாடல் இருக்கிறதோ இல்லையோ, எப்படியாவது படத்தை ஹிட் ஆக்கிவிடுகிறார்.

என்ன நல்லது

என்ன நல்லது

இவர் நடித்து பிளோ ஆவரேஜ் படம் என்று எதுவும் இல்லை. வரிசையாக எல்லா படங்களும் ஹிட் அடித்துள்ளது அல்லது பிரேக் ஈவன் செய்துள்ளது. இந்த நிலையில் இவருக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் இப்போது சண்டை வந்துள்ளது.

பெயர்

பெயர்

விஜய் தேவரகொண்டா தெலுங்கில் ஹீரோ என்ற படம் நடித்து வருகிறார். இது தமிழிலும் வெளியாக உள்ளது. இதன் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

அதேபோல் தமிழில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்ற பெயரில் படம் நடித்து வருகிறார். இதை கேஜேஆர் ஸ்டுடியோஸ் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பெயர் எங்களுடையது என்று கூறி டிரைபல் ஆர்ட்ஸ் தென்னிந்தியா சினிமா சங்கத்தில் முறையிட்டது.

என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

நாங்கள்தான் முதலில் பதிவு செய்தோம். அதனால் எங்களுக்கு படத்தின் பெயரை அளிக்க வேண்டும் என்று விஜய் தேவர கொண்டா படக்குழு தெரிவித்தது . இது தொடர்பாக ஒரு மாதமாக விசாரிக்கப்பட்டது.

முடிந்தது

முடிந்தது

அதன்பின் டிரைபல் ஆர்ட்ஸ் சார்பாக விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம்தான் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அந்த படத்துக்கு மட்டுமே ஹீரோ என்ற பெயரை அனுமதிக்க முடியும். ஆகவே சிவகார்த்திகேயன் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சண்டை

சண்டை

இதனால் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் தேவரகொண்டா இடையே சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் இந்த தலைப்பு பிரச்சனை காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

என்ன சமாதானம்

என்ன சமாதானம்

இந்த நிலையில் இவர்கள் இடையே சமாதானம் பேச முக்கியமான தெலுங்கு நடிகர் ஒருவர் முயன்று வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த தெலுங்கு நடிகர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் மூலமாக இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்க்க முடிவு செய்துள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X