தலைப்புக்கா பஞ்சம்... தனது முதல் படத்தின் பெயரையே புதிய படத்திற்கு வைத்த விஜய்!
தமிழில் விஜய் தேவரகொண்டா, பூஜா ஜவேரி நடிக்கும் படம் 'அர்ஜுன் ரெட்டி'.
Recommended Video

சென்னை : விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி' எனும் படம் தமிழில் உருவாகிறது.
விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 'அர்ஜுன் ரெட்டி' என்ற பெயரிலேயே தமிழில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவே நடிக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான துவாரகா படத்தின் தமிழ் ரீமேக் தான்.

இப்படத்தை ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் ஏ.என்.பாலாஜி தயாரிக்க, ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்குகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி, ப்ரிதிவிராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஸ்யாம் கே.நாய்டு ஒளிப்பதிவு செய்ய, சாய்கார்த்திக் இசையமைக்கிறார். இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஏ.என்.பாலாஜி, " தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழ் " அர்ஜுன்ரெட்டி " என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.

அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகபெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிதார் விஜய் தேவர்கொண்டா. இந்த " அர்ஜுன்ரெட்டி படமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மூன்று ஒருசேர கலந்த கலவைதான் இந்த " அர்ஜுன்ரெட்டி. அந்த அர்ஜுன் ரெட்டியை போலவே இந்த அர்ஜுன்ரெட்டியும் மிகுந்த வரவேற்பை பெறும்" என அவர் கூறினார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











