“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” ; விஜய் தேவரகொண்டா!

நோட்டா திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Recommended Video

நோட்டா படம் பற்றி ஹீரோ விஜய் தேவராக்௯ஒண்டா சொன்ன ரகசியங்கள். வீடியோ

சென்னை: நோட்டா திரைப்படத்துக்காக தானும் காத்திருப்பதாக நடிகர் விஜய் தேவரகொண்டா கூறினார்.

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நோட்டா.' தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

Vijay devarakonda is marana waiting for Nota

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ்,சன்சனா மற்றும் பிக்பாஸ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, "முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.

ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்... இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்.. இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை." என்றவர் 'சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
"காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்" எனும் திருக்குறளை அவர் ஒப்புவித்தார். நோட்டா திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருக்கி

More from Filmibeat

Read more about: press meet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X