Kingdom Blue Sattai Maran Review: லைட்டா கருகின வாடை வருது.. கிங்டம் அவங்க ஊரு ரெட்ரோ.. விமர்சனம்!
சென்னை: இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கியுள்ள கிங்டம் படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும், சத்யதேவ் வில்லனாகவும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், அனிருத்தின் பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது என படம் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் தொடக்கத்தில் கதாநாயகனின் சிறுவயது போர்ஷனை காட்டுகிறார்கள். சிறுவயதிலேயே கதாநாயகனின் அண்ணன், அவரது அப்பாவை கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் அண்ணனை கண்டுபிடித்து அவனை தனது அம்மா முன் நிறுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார். அதன் பின்னர் கதாநாயகன் வளர்ந்து காவல்துறை கான்ஸ்டபிளாக ஆகிறார். ஹீரோ முன்கோபியாக இருக்கிறார். அந்த சமயத்திலும் தனது அண்ணனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அவரது முன் கோபத்தாலே கதாநாயகனுக்கு வேலை போகும் சூழல் ஏற்படுகிறது.

அந்த நேரத்தில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் கதாநாயகனுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அது என்னவென்றால், இலங்கையில் இருக்கும் ஒரு பயங்கரவாத குழுவுக்குள் நீ ஊடுருவி அவர்கள் குறித்த தகவலை சேகரித்து கொடுக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த குழுவின் தலைவன் நீ தேடிக்கொண்டு கொண்டு இருக்கும் உனது அண்ணன் எனக் கூறுகிறார். அண்ணனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என கதாநாயகனும் இந்த வேலையை ஒத்துக் கொண்டு இலங்கைக்கு கிளம்புகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
உளவாளி வேலை: இதுவரை சொன்ன அனைத்துமே படத்தின் முதல் 20 நிமிடத்தில் வந்துவிட்டது. அதன் பின்னர் படத்தை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று நினைத்தால், படத்தை இலங்கைத் தீவு, அதற்கு அருகில் உள்ள ஒரு தீவுக்கு கொண்டு போகிறார்கள். அங்கு பழங்குடி மக்களைப் போல ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தை ஒரு குழு அடக்கி ஆண்டுகொண்டு உள்ளது. அந்த ஊருக்குள்ளதான் கதாநாயகன் எண்ட்ரி கொடுக்கிறார்.

ரெட்ரோ சாயல்: படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது லைட்டா கருகின வாடை அடித்தது. ஆயிரத்தில் ஒருவன், தோரணை, தேவரா போன்ற படங்களில் சாயல் இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால் ரெட்ரோ படத்தை அப்படியே இறக்கி வைத்துள்ளார்கள். இது தெலுங்கு சினிமாவின் ரெட்ரோ. கதைப்படி பார்த்தால் தனது அண்ணனை அழைத்து வந்து தனது அம்மாவின் முன்னால் நிறுத்துவது தானே. ஆனால் தனது அண்ணன், அண்ணியை கொன்று விட்டு, அங்குள்ள குழுவுக்கு கதாநாயகனே தலைவன் ஆகிவிடுகிறார். ஆரம்பித்த கதை என்ன? முடிக்கிற கதை என்ன? இந்த படத்தில் லவ் சீனும் இல்லை, குத்து பாட்டும் இல்லை. படத்தில் எதுக்கு கதாநாயகி என்றே தெரியவில்லை. படம் முழுக்க ஒரே ஃபிளாட்டாக போய்க்கொண்டு உள்ளது.படத்தின் மேக்கிங் நன்றாக உள்ளது" என தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











