Kingdom Box Office: முதல் நாளே வசூலை அள்ளிய கிங்டம்.. விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு வெற்றி பார்சல்!
சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி நேற்று அதாவது ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கிங்டம். இந்த படத்தின் மீது விஜய் தேவர கொண்டா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. காரணம் விஜய் தேவரகொண்டா இதற்கு முன்னர் நடித்து வந்த படங்களின் பாணியில் இருந்து மொத்தமாகவே வேறு பாணி திரைப்படத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ள இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கிங்டம் படத்தை, நானியை வைத்து ஜெர்ஸி படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கியுள்ளார். இப்படத்தில், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும், சத்யதேவ் வில்லனாகவும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், அனிருத்தின் பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது என படம் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். ஹைதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நிகரான அளவில் சுமார் 42 அடி உயரத்திற்கு அனிருத்துக்கு கட்-அவுட் வைத்து கொண்டாடி உள்ளார்கள், ரசிகர்கள்.

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை, விஜய் தேவரகொண்டா தனது அண்ணனைத் தேடி ஸ்பை ஆக பயங்கரவாத கும்பலுக்குள் ஊடுருவும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நிதானமான அதே நேரத்தில் உணர்ச்சிமிக்க நடிப்பு, வசன உச்சரிப்பு ஆகியவை படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளது என பாராட்டி வருகிறார்கள். இப்படம் முதலில் ஜூலை 4, 2025 அன்று ரிலீஸ் ஆகவுள்ளது என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு பணிகள் முடியாததால் மூன்று முறை தள்ளிப்போனது. இதனால் நேற்று அதாவது ஜூலை 31 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
பாராட்டு: படம் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு, அனிருத்தின் இசை என இரண்டுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்வதற்கான கதைக்களமாக இந்த படம் இருப்பதால், படத்தை தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு வட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் விபரம்: படம் முதல் நாளே படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வசூலைக் குவித்துள்ளது. அதாவது முதல் நாளில் இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து, சுமார் ரூபாய் 15.5 கோடிகள் வசூலானதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. முதல் நாளே படத்திற்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் என்பதால், இந்த வாரத்தில் இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. எனவே இந்த மூன்று நாட்களிலும் படத்துக்கு நல்ல வசூல் கிடைக்கும் எனவும் படக்குழு நம்புகிறது.

எதிர்பார்ப்பு: இது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வசூல் எல்லாம் இருப்பதால் முதல் நாளே படம் சுமார் ரூபாய் 30 கோடிகள் வரை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமமும் நல்ல விலைக்கு விற்று உள்ளதால், அடுத்த வார தொடக்கத்தில் இருந்து வசூலாகும் அனைத்தும் படக்குழுவுக்கு லாபமாக தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தோடு வேறு படங்கள் எதுவும் பெரிய அளவில் ரிலீஸ் ஆகாததால், கிங்டம் படத்தின் வசூலுக்கு அது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











