ஹைதராபாத் வா சில் பண்ணலாம்.. நடிகையை மிஸ் பண்ணும் பிரபல நடிகர்.. பகிரங்க அழைப்பு!
சென்னை: பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன்னுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
Recommended Video
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் பெரும் ஹிட்டடித்தது.
தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

பிறந்தநாள் வாழ்த்து
தற்போது ஹீரோ, ஃபைட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் விஜய் தேவரகொண்டா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

என்னுடைய கம்ரேட்
கீதா கோவிந்தம், டியர் கம்ரெட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வாழ்த்து கூறியிருந்தார். மிகவும் சந்தோஷமான பிறந்த நாள் என்னுடைய கம்ரேட்.. என பன்றியின் முகத்தை பதிவிட்டிருந்தார்.

வாழ்த்துக்கு நன்றி
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நன்றி கூறிய விஜய் தேவரகொண்டா அவரை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

சில் பண்ணலாம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மந்தனா என குறிப்பிட்டு ஹார்ட்டின் சிம்பளை பதிவிட்டுள்ளார். மேலும் மீண்டும் ஹைத்ராபாத்துக்கு வா.. எங்களுடன் சில் பண்ணு.. கேங்க் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுது என பதிவிட்டுள்ளார்.

சுல்தான் படம்
மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே ஸ்பெஷல் ஃபிரண்ட்ஷிப் இருந்து வருகிறது. விஜய் தேவரகொண்டா தற்போது அனன்யா பாண்டேவுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











