twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “வாய்ப்பு வந்தும் பாலிவுட் செல்ல யோசித்தேன்”: விஜய் தேவரகொண்டா இதுக்காக தான் இப்படி சொன்னாரா?

    |

    ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.

    பூரிஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார்.

    'லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இந்தி படங்களில் நடிக்காதது ஏன் என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

    அதிதி என் தங்கச்சி மாதிரி..கை கூப்பி மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..பின்னணி என்ன தெரியுமா?அதிதி என் தங்கச்சி மாதிரி..கை கூப்பி மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..பின்னணி என்ன தெரியுமா?

    ஹாட் பாய் விஜய் தேவரகொண்டா

    ஹாட் பாய் விஜய் தேவரகொண்டா

    தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக கலக்கி வருகிறார் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்குப் பின்னர் இவரது மார்க்கெட் படு உச்சத்திற்கு சென்றுவிட்டது. ரியல் ஹீரோ மெட்டீரியலாகவும் ரசிகைகளின் ஹாட் பாயாகவும் அசத்தி வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது 'லைகர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    தாறுமாறான எதிர்பார்ப்பில் லைகர்

    தாறுமாறான எதிர்பார்ப்பில் லைகர்

    பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள 'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார். அதற்காக சிக்ஸ் பேட் உடற்கட்டுடன் மிரட்டலாக காட்சியளிக்கும் விஜய் தேவரகொண்டா, இந்தப் படத்தில் ஆக்சனில் வெளுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும், அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர். அதேபோல் முக்கியமான பாத்திரத்தில் மைக் டைசன் நடித்துள்ளார்.

    பான் இந்தியா படமாக ரிலீஸ்

    பான் இந்தியா படமாக ரிலீஸ்

    பிரமாண்டமாக உருவாகியுள்ள 'லைகர்' படத்தின் ட்ரெய்லரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்சன் காட்சிகளில் விஜய் தேவரகொண்டா அதிகமாக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதையும் ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. இதனால் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் 'லைகர்' படம், தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதன் காரணமாக 'லைகர்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா பிஸியாக இருக்கிறார்.

    இந்தியில் சான்ஸ் கிடைத்தது!

    இந்தியில் சான்ஸ் கிடைத்தது!

    அதேபோல், ஐதராபாத்தில் நடைபெற்ற லைகர் ப்ரோமோஷனில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "அர்ஜுன் ரெட்டி வெளியானதும் பாலிவுட்டுக்கு வரும்படி கரண் ஜோஹர் அழைத்தார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அர்ஜுன் ரெட்டி படத்தால் கிடைத்த பெயரை வைத்து, இந்திக்கு செல்வது சரியாக இருக்காது என நினைத்தேன். மேலும், அப்போது பாலிவுட்டில் பலருக்கும் என்னை தெரியாது. இப்போது லைகர் படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    IFFI 2019: Rakul Preet & Vijay Deverakonda's full conversation IFFI 2019 | FilmiBeat Tamil
    இனிமேல் பாலிவுட் செல்வேன்

    இனிமேல் பாலிவுட் செல்வேன்

    தொடர்ந்து பேசியுள்ள அவர், "இப்படியொரு படம் மூலம்தான் பாலிவுட் செல்ல நினைத்தேன். தெலுங்கு சினிமாவையும் தென்னிந்திய சினிமாவையும் விட்டுவிடக் கூடாது. அதேநேரம், இந்தியிலும் தடம் பதிக்க வேண்டும் என யோசித்தேன். அதை நிறைவேற்றும் விதமாக 'லைகர்' அமைந்தது. அதை கரண் ஜோஹரே தயாரித்திருப்பதும் சிறப்பாகிவிட்டது. அதனால் இனிமேல், இந்திப் படங்களில் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக நடிப்பேன்" எனத் தெரித்துள்ளார்.

    English summary
    Vijay Devarakonda opens up about not acting in a Hindi film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X