பூரி ஜெகன்னாத் -விஜய் தேவரகொண்டா இணையும் ஜன கன மண... மிரட்டலான டைட்டில் போஸ்டர் வெளியீடு
மும்பை : விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முக்கியமான நடிகராக உருவாகியுள்ளார். இவருக்கு ஏராளமான குறிப்பாக பெண் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது லைகர் படம் வரும் ஆகஸ்டில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக ஜன கன மண படத்திலும் பூரி ஜெகன்னாத்துடன் இணைகிறார்.

லைகர் படம்
விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாகி வருகிறது லைகர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அனன்யா பாண்டே. இந்தப் படத்தின் மூலம் மைக் டைசன் இந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார். வரும் ஆகஸ்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் பூரி ஜெகன்னாத் கூட்டணி மீண்டும் அடுத்த படத்திலும் இணையவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் அமெரிக்காவில் துவங்கவுள்ளது. படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கவுள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டர்
இதன்மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் மிரட்டலான வகையில் அமைந்துள்ளது.

ராணுவ வீரர்களின் சவால்கள்
ராணுவ வீரர்கள் நாட்டிற்காக மேற்கொள்ளும் பல்வேறு சவால்களை இந்த போஸ்டர் குறிப்பிடுகிறது. மேலும் இந்திய வரைபடமும் போஸ்டரில் காணப்படுகிறது. மேலும் போஸ்டரில் மிகவும் வலிமையான ஆயுதங்களும் காணப்படுவது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆகஸ்ட் 2023ல் வெளியீடு
பூரி ஜெகன்னாத், தேசிய விருது இயக்குநர் வம்சி படிப்பள்ளி மற்றும் சார்மி கவுர் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர். இதனிடையே படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டில் வெளியாகவுள்ள லைகர் படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள நிலையில், அடுத்த படமும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











