கரண் ஜோகர் படத்தை நிராகரித்தார் விஜய் தேவரகொண்டா .. காரணம் இது தான் !

ஹைதராபாத் : கரண் ஜோகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விஜய் தேவரகொண்டா விலகி உள்ளார்.

Recommended Video

Vijay Deverakonda Refused Karan Johar Bollywood Offer

அர்ஜுன் ரெட்டி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் போன்ற படங்களின் மூலம் அறிமுகமானதை அடுத்து ஹிந்தியிலும் அறிமுகமாக இருந்தது.

கொண்டாடி வருகின்றனர்

கொண்டாடி வருகின்றனர்

பொதுவாக தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக வேற்றுமொழி நடிகர்களை தங்களது நடிகராக கொண்டாட மாட்டார்கள். தமிழ் ரசிகர் மட்டுமல்லாமல் எந்த ஒரு மொழி ரசிகர்களாக இருந்தாலும் தங்களது மொழியில் நடிக்கும் நடிகர்களை மட்டுமே தூக்கிவைத்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக தற்பொழுது தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டா தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல வேற்றுமொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

கதாநாயகனாக அறிமுகம்

கதாநாயகனாக அறிமுகம்

நுவ்விலா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் எவடே சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா பெல்லி சூப்புளு என்ற திரைப்படத்தின் மூலம் முழு கதாநாயகனாக அறிமுகமாகி தெலுங்கு திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமானார்.

ரிது வர்மா

ரிது வர்மா

மிக எளிதான கதைக்களத்தில் உருவான பெல்லி சூப்புளு படத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் ரிது வர்மா இணைந்து நடித்திருப்பார். இந்த படம் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று பல மடங்கு வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது.

மிகப்பெரிய சாதனை

மிகப்பெரிய சாதனை

பெல்லி சூப்புளு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாகி தெலுங்கு திரைப்பட உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்து உலகெங்கிலும் பிரபலமானது.

ஹிந்தியிலும் ரீமேக்

ஹிந்தியிலும் ரீமேக்

இவ்வாறு மிகப்பெரிய வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பின்னாளில் தமிழில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் துரு விக்ரம் அறிமுக படமாக இது அமைந்தது. மேலும் இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து அதில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து இருந்த நிலையில் அங்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது வசூல் சாதனை புரிந்தது.

4 மொழிகளில்

4 மொழிகளில்

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து விஜய் தேவரகொண்டாவை மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் பிரபலம் அடையச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரே சமயத்தில் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

படத்திலிருந்து விலகியுள்ளார்

படத்திலிருந்து விலகியுள்ளார்

இந்த படத்தின் இந்தி உரிமையை கரண் ஜோகர் பெற்றுள்ளார். மேலும், விஜய்தேவரகொண்டாவை வைத்து 40 கோடி ரூபாய் செலவில் திரைப்படம் ஒன்றை தயாரிக்க கரண் ஜோகர் திட்டமிட்டிருந்தாக சொல்லப்பட்டு வந்த நிலையில் விஜய் தேவரகொண்டா அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

ஹிந்தியில் நடிக்க

ஹிந்தியில் நடிக்க

அதற்கான காரணமாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது தான் நடித்த கதாபாத்திரங்களில் திரும்பத் திரும்ப நடிக்க விருப்பமில்லை, அதை எனது ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். நான் ஹிந்தியில் திரைப்படங்களை பண்ண மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் ஆனால் ஒரே மாதிரி கதைகளில் இல்லாமல் புதுமையான கதைகளில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நான் நடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X