ஆனந்த் தேவரகொண்டாவின் ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்‘.. ஓடிடியில் ரிலீஸ்!
ஹைதராபாத் : இந்தியாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தேவர கொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா தற்போது தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
ஆனந்த் தேவரகொண்டாவின் முதல் படமான டோரசனி சென்ற வருடம் வெளியான நிலையில் தற்பொழுது இவரின் இரண்டாவது படமான மிடில் கிளாஸ் மெலோடிஸ் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட இப்படக்குழு காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அதிரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில வருடங்களிலேயே
தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிகப்பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. திரைத்துறையில் அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே மிகப்பெரிய உச்சத்தை எட்டி தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் நடித்து வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பின் தொடர்கிறது.

ராஜசேகரின் மகள்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா சென்ற ஆண்டு வெளியான டோரசனி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும் டோரசனி திரைப்படத்தில் பிரபல மூத்த நடிகரான ராஜசேகரின் மகள் சிவத்மிகாவும் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல்
கதாநாயகன் மற்றும் கதாநாயகி என இருவரும் அறிமுகமான இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில் திரையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.

வினோத் ஆனந்தோஜூ
இந்நிலையில் ஆனந்த் தேவரகொண்டா தனது இரண்டாவது படமாவது கட்டாயம் ஹிட் கொடுத்து விட வேண்டும் என தீவிரமான கதை தேடலில் இறங்கி குறும்பட இயக்குனர் வினோத் ஆனந்தோஜூ இயக்கத்தில் தனது இரண்டாவது படமான "மிடில் கிளாஸ் மெலோடிஸ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக 96 மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கிளாஸ் குடும்பத்தை
மிடில் கிளாஸ் மெலோடிஸ் திரைப்படம் குண்டூரில் உள்ள ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த கதையாகவும், இது இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி காதல் கதைக் களங்களையும் கொண்டுள்ளதாகவும் இந்த படக்குழு தெரிவித்துள்ளது.

திரையரங்கில் வெளியிடலாம்
இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து லாக்டவுன் அறிவிப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே திரையரங்குகளில் வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில், கொரானா அச்சத்தின் காரணமாக தாமத படுத்தப்பட்டு பின் திரையரங்கில் வெளியிடலாம் என காத்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை பல மாதங்களாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில்
இந்த நோய்த்தொற்று பரவல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் படக்குழு இதனை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. மேலும் இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடாத நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தப்படத்தை ஆன்லைனில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











