‘லைகர்’ படத்தின் கதை இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி: பான் இந்தியா ஹீரோவாகிறாரா விஜய் தேவரகொண்டா?

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'லைகர்' திரைப்படம், இம்மாதம் 25ம் தேதி வெளியாகிறது.

ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள 'லைகர்' படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 'லைகர்' படத்தின் சென்சார் அப்டேட்டுடன் முதல் விமர்சனம் லீக் ஆகியுள்ளது, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் பான் இந்தியா படங்கள்

அதிகரிக்கும் பான் இந்தியா படங்கள்

'பாகுபலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இருந்து அதிகமான பான் இந்தியா படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லைகர்' படமும் உருவாகியுள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக

விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள 'லைகர்' படத்தில், ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது எனத் தெரிகிறது. இதனிடையே இந்தப் படத்தில், உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக, பிரபல ரியல் குத்துச்சண்டை வீரரான மைக் டைசனும் நடித்துள்ளார். இந்தியத் திரைப்படம் ஒன்றில் மைக் டைசன் நடித்துள்ளது, ஹாலிவுட் திரையுலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மிரட்டிய லைகர் ட்ரெய்லர்

மிரட்டிய லைகர் ட்ரெய்லர்

நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த 'லைகர்' படம், தற்போது ரிலீசுக்கும் ரெடியாகிவிட்டது. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே 'லைகர்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி, ரசிகர்களை மிரள வைத்தது. விஜய் தேவரகொண்டாவின் வசனங்களும், அவரது அதிரடியான ஆக்சன் சீன்களும், அல்டிமேட்டாக இருந்தன.

லைகர் இரண்டாவது சிங்கிள்

லைகர் இரண்டாவது சிங்கிள்

அதேபோல் 'லைகர்' படத்தின் முதல் பாடலான 'அக்டி பக்டி' வெளியாகி, அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடலும் வெளியானது. இப்பாடல் நேற்று (ஆக 5) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது. இதில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவின் கெமிஸ்ட்ரி, ரசிகர்களை சூடேற்றி வருகிறது.

லைகர் சென்சார் அப்டேட்

லைகர் சென்சார் அப்டேட்

'லைகர்' படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 20 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அதன் முதல் விமர்சனம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் அதாவது, 140 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதி சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றும், 2வது பாதி சுமார் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் எனவும் தெரியவந்துள்ளது.

லைகர் முதல் விமர்சனம் லீக்

லைகர் முதல் விமர்சனம் லீக்

இந்த நிலையில் தான், 'லைகர்' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்தை ரொம்பவே பாராட்டியுள்ளனராம். விஜய் தேவரகொண்டாவின் ஆக்சன் காட்சிகள், நடிப்பு எல்லாமே அவரை பான் இந்தியா ஸ்டார் என்ற அடையாளத்தை கொடுக்கும் என்றும், படமும் வசூலில் பட்டையக் கிளப்பும் எனவும் பாராட்டியுள்ளனர். சென்சார் போர்டு உறுப்பினர்களின் இந்த பாராட்டு, 'லைகர்' படக்குழுவினருக்கு பாசிட்டிங் எனர்ஜியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X