க்ளைமாக்சை காமெடி ஆக்கிட்டாங்க ப்ரோ.. லைகர் படம் குறித்து பப்ளிக் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது லைகர்.

Recommended Video

Liger Movie Review | Yessa ? Bussa ? | |Vijay Deverakonda|Ananya Panday|Ramya Krishna|Puri Jagannadh

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கரண் ஜோஹர், நடிகை சார்மி தயாரித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது லைகர்.

லைகர் படம்

லைகர் படம்

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது லைகர். சர்ச்சைகளை தாண்டி வெளியாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கரண் ஜோஹர், நடிகை சார்மி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் தற்போது பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து அவர்களே சொன்ன விமர்சனங்களை பார்ப்போம்.

விஜய் தேவரகொண்டாவிற்கு பாராட்டு

விஜய் தேவரகொண்டாவிற்கு பாராட்டு

படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். படத்திற்காக உடம்பை சரியாக ஏற்றி அவர் அதிகமாக மெனக்கெட்டிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். படத்தின் ஆக்ஷன் காட்சிகள், எம்எம்ஏ போட்டிகள் வேற லெவல் என்றும் கூறியுள்ளனர். இதேபோல படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பும் பாராட்டிற்கு உரியதாகியுள்ளது.

காமெடியான க்ளைமாக்ஸ்

காமெடியான க்ளைமாக்ஸ்

இந்தப் படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ள நிலையில், க்ளைமாக்சில் அவரை வைத்து காமெடிதான் செய்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். க்ளைமாக்ஸ் காட்சிகளை சீரியசாக வைத்திருந்தால் படம் கவனத்தை ஈர்த்திருக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை

எது எப்படி இருந்தபோதிலும் படத்தில் விஜய் தேவரகொண்டா தான் பலமாக உள்ளதாகவும் மற்றபடி படத்தில் வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கதை குறித்த எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் படத்தை ஒருமுறை பார்க்கலாம் எனற்ம் கூறியுள்ளனர்.

சொதப்பிய பர்ஸ்ட் ஆப்

சொதப்பிய பர்ஸ்ட் ஆப்

படத்தின் பர்ஸ்ட் ஆப் ரொம்ப சொதப்பல் என்றும் இரண்டாவது ஆப் ஓகே அளவில்தான் உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அனன்யா பாண்டே வரும் இடங்கள் எல்லாமே கடுப்பை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இசை பரவாயில்லை ரகம்தான் என்றும் கூறியுள்ளனர். ஓடிடியில் வெளியானால், ஓட்டி ஓட்டி ஒரு அரை மணிநேரம் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

எதிர்பார்ப்பை பொய்யாக்கிய லைகர்

எதிர்பார்ப்பை பொய்யாக்கிய லைகர்

90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகர் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் போன்று இந்தப் படமும் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல படத்திற்கு கடந்த 40 நாட்களாக சிறப்பான பிரமோஷன் தரப்பட்டது. படத்திற்காக அனன்யா பாண்டேவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டா தொடர்ந்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

இந்நிலையில் போட்ட முதலையாவது படம் கொடுக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. சிறப்பான பல காதல் படங்களை கொடுத்து ரசிகர்களின் பேவரிட்டாக இருந்த விஜய் தேவரகொண்டா, இந்தப் படத்தின்மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுததுள்ள நிலையில், படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X