நடுவிரல் காட்டிய 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோ.. 'நோட்டா' ஷூட்டிங் ஆரம்பம்!

By Vignesh Selvaraj

Recommended Video

அர்ஜுன் ரெட்டியின் நோட்டா' ஷூட்டிங் ஆரம்பம்!- வீடியோ

சென்னை : கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு 'நோட்டா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் மூன்றாவது படமான இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி மெஹ்ரீன் நடிக்கவுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஞானவேல்ராஜா தயாரிப்பு

ஞானவேல்ராஜா தயாரிப்பு

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு, சாந்தா ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஷான் கருப்புசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்

தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் 'நோட்டா' படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. தலைப்பே இல்லாமல் ஆரம்பமான இப்படத்திற்கு, தற்போது 'நோட்டா' என பெயர் வைத்துள்ளனர். இன்று ஷூட்டிங் தொடங்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

நடுவிரல்

நடுவிரல்

படத்திற்கு 'நோட்டா' என பெயர் வைத்திருப்பதால், இது நிச்சயம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் தான் உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் படத்தின் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா, நடுவிரலை காட்டியிருப்பது சற்று சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

பாஜக விமர்சனம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை வாங்கியிருந்ததை கேலி செய்யாத அரசியல் கட்சிகளே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் படத்திற்கு 'நோட்டா' என டைட்டில் வைத்து பாஜகவினரை சீண்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X