Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கட்டிபிடித்து.. முத்தம் கொடுத்து பர்த்டே விஷ்.. விஜய்தேவரகொண்டா சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்த சமந்தா!
சென்னை : நடிகை சமந்தாவுக்கு படப்பிடிப்புதளத்தில் சப்ரைஸாக பிறந்த நாள் பார்ட்டி கொடுத்துள்ளார் விஜய்தேவரகொண்டா.
நடிகை சமந்தா தற்போது, சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

சமந்தா
முன்னணி நடிகையான சமந்தா அனைவரும் திகைத்து பார்க்கும் அளவுக்கு அசுரவளர்ச்சி அடைந்து வருகிறார். நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நேரத்தில், கூடிய விரைவில் நடிகை சமந்தா அந்த இடத்தை பிடித்து விடுவார் என்று கோலிவுட், டோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

தாராள கவர்ச்சி
திருமணத்திற்கு பின்பு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, தற்போது விவாகரத்து பிறகு அதிக அளவில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். அதுவும் புஷ்பா படத்தில் ஊ சொல்லியா மாமா ஐட்டம் பாடலுக்கு பிறகு, சமந்தாவின் ரேஞ்சு மாறிவிட்டது என்று சொல்லாம், அந்த அளவுக்கு புது துள்ளலுடன் காணப்படுகிறார் சமந்தா,

ஆல்ரவுண்டர்
தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஓடிடி என அனைத்திலும் தடம் பதித்த சமந்தா ஹாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார். பிலிப் ஜான் இயக்கத்தில் 'தி அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார். மேலும் சாகுந்தலம், யாசோதா,விஜயதேவரா கொண்டாவுடன் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில், நடிகை சமந்தா, ஏப்ரல் 28ந் தேதி தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொண்டார். அப்போது விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது விஜய் தேவரகொண்டார் சமந்தா பிறந்தநாளுக்கு சப்ரைஸாக கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.

திகைத்துப்போன சமந்தா
விஜய் தேவரகொண்டாவின் இந்த சர்ப்ரைஸை சற்றும் எதிர்பார்க்காத சமந்தா திகைத்துப் போனார். பின்னர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமந்தா பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் டிராண்டாகி வருகிறது.