ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்
சென்னை: விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மோசமான தோல்வியை தழுவியுள்ளதாக தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர்
'அர்ஜுன் ரெட்டி' விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள படம், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.
தெலுங்கு, தமிழில் வெளியான இந்தப் படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

4 ஹீரோயின்கள்
அவர், ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கிராந்தி மாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆனது.
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

அர்ஜூன் ரெட்டி
இந்தப் படத்தின் டீசர் வெளியானதுமே, இது அர்ஜூன் ரெட்டி படத்தை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். தெலுங்கு டீசர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. அதில், சில வல்கரான, வெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம். தமிழ் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ் டீசரில் அதை மாற்றி வெளியிட்டனர்.

பெரிய ஓபனிங்
இந்நிலையில் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் நாள் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் இருந்தது. ஆனால், அடுத்த நாள் பாதியாக சரிந்த வசூல், பிறகு மொத்தமாக சரிந்தது. எதிர்பார்ப்புள்ள ஹீரோ, விஜய் தேவரகொண்டா இதுபோன்ற கதைகளில் நடிக்கக் கூடாது என்று ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் எழுதி வருகின்றனர். இது தவறான சாய்ஸ் என்றும் கூறி வருகின்றனர்.

ரூ.10 கோடி மட்டும்
இந்தப் படம் ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டதாம். ஆனால், மொத்தமாக ரூ.10 கோடி மட்டும்தான் வசூலாகும் என்று கூறப்படுகிறது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்று தெரிகிறது. கடந்த மாதம் வெளியான ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படம் படுதோல்வி அடைந்தது. அடுத்து சமீபத்தில் வெளியான 96 ரீமேக்கான ஜானுவும் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

கடைசி காதல்
இப்போது இந்தப் படமும் தோல்வி அடைந்திருப்பது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நான் நடித்துள்ள கடைசி காதல் படம் இதுதான் என்றும் இனி காதல் கதைகளில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் தேவரகொண்டா, இந்தப் பட ரிலீஸுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்காது.


Click it and Unblock the Notifications











