Samantha - சமந்தாவை கட்டிப்பிடித்து கொஞ்சும் விஜய் தேவரகொண்டா -ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Samantha (சமந்தா) நடிகை சமந்தாவை விஜய் தேவரகொண்டா கட்டிப்பிடித்து கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து அங்கும் டாப் ஹீரோயினாக உயர்ந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்தார். அதனையடுத்து கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

அடித்து நொறுக்கிய சமந்தா: திருமண வாழ்க்கை பிரச்னையை சந்தித்தலா, இப்னி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.
உச்சம் சென்று சரிந்த சமந்தா: இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய; தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார். இப்போதும் அவ்வப்போது சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலைய்லி இருக்கிறார்.

சமந்தாவின் குஷி: இப்படிப்பட்ட சூழலில் ஷிவ நாராயணா எழுதி இயக்கியிருக்கும் குஷி படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். ஹீரோவாக நாக சைதன்யா நடித்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் அந்தப் படம் சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிவருகின்றனர், படமானது செப்டம்பர் ஒன்றாம் தேதி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் முதல் சிங்கிளான ரோஜா நுவ்வே (தமிழில் என் ரோஜா நீயா) என்ற சிங்கிள் பாடல் வெளியானது.
விஜய் தேவரகொண்டாவின் வீடியோ: இந்தப் பாடலானது முழுக்க இயற்கை சூழ் இடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. பாடலை பார்த்த, கேட்ட ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பாடல் ஷூட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில்,சமந்தாவுடன் செம க்யூட்டாக இருப்பது போன்றும், பாடலுக்ககா சமந்தாவை அவர் அள்ளி அணைத்து கொஞ்சுவது போன்றும் காட்சிகள் இருக்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
கட்டாய ஹிட்: முன்னதாக மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் முழு வேகத்தில் படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது.இதன் காரணமாக சமந்தாவின் கரியரில் சாகுந்தலம் பெரும் தோல்வி படமாக சேர்ந்திருக்கிறது. எனவே ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











