twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த 'அர்ஜுன் ரெட்டி' நாயகன்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அர்ஜுன் ரெட்டியின் நோட்டா' ஷூட்டிங் ஆரம்பம்!- வீடியோ

    சென்னை : தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

    இந்த நிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தயாராகும் 'நோட்டா' படத்தின் மூலம் தமிழுக்கும் வருகிறார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருக்குறள் சொல்லிப் பேசத் தொடங்கினார் விஜய் தேவரகொண்டா.

    நோட்டா

    நோட்டா

    அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எழுத்தாளர் ஷான் கருப்புசாமி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நேற்று மாலை இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

    திருக்குறள்

    திருக்குறள்

    'நோட்டா' நாயகன் விஜய் தேவரகொண்டா திருக்குறளுடன் தனது பேச்சைத் துவக்கினார். "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவமென்பது இழுக்கு." எனும் குறளை மேற்கொள்காட்டி பேசத் தொடங்கினார் விஜய்.

    இறங்கிவிட்டால் யோசிக்கக் கூடாது

    இறங்கிவிட்டால் யோசிக்கக் கூடாது

    "2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சொன்னது இது. ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டும். காரியத்தில் இறங்கி விட்டால் அதை ஜெயிப்பது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    கதையைக் கேட்டதும்

    கதையைக் கேட்டதும்

    அப்படித்தான் நான் தமிழில் நடிக்க நிறைய யோசித்தேன். தெரியாத மொழியில் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற சந்தேகம் தான் காரணம். ஆனால் நோட்டா கதையை கேட்டவுடன் தமிழில் நடிப்பது என்று முடிவு செய்து விட்டேன்.

    தமிழில் டப்பிங்

    தமிழில் டப்பிங்

    இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரே ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்தப் படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். படப்பிடிப்பு நடக்கும் 3 மாதத்திற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்' எனப் பேசினார்.

    English summary
    Vijay Devarakonda is coming to Tamil through the film 'NOTA' directed by Anand Sankar. "I will talk Tamil dubbing in this film. I will learn Tamil within shooting days," said Vijay Devarakonda.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X