பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக் "ஓ மணப்பெண்ணே".. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்!

சென்னை : கடந்த ஒரு சில நாட்களாகவே இளசுகளின் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட பெயர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கரின் இறுக்கமான புகைப்படங்கள்.

அச்சமயம் வெளியான புகைப்படங்களைப் பார்த்து பலரும் இருவரும் காதலிக்கின்றனர் என்று கூறிவந்த நிலையில் ஒரு சிலர் அது இவர்களின் புது படத்திற்கான ப்ரமோஷன் என கூறி வந்தனர்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வரும் "பெல்லி சூபுளு" என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான " ஓ மணப்பெண்ணே" படத்தின் போஸ்டரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொற்றிக் கொள்வது

தொற்றிக் கொள்வது

இரண்டு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட இளம் நடிகர்கள் இணைந்து நடிக்கும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்வது போல இப்பொழுது ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணையும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவிலேயே உள்ளது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றிபெற்ற "பெல்லி சூபுளு" என்ற திரைப்படம் தமிழில் தயாராகி கொண்டிருப்பதை தொடர்ந்து அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் காதலிக்கிறார்கள்

இவர்கள் காதலிக்கிறார்கள்

இப்படத்திற்கான அப்டேட்டுகள் அவ்வப்போது வெளி வந்தாலும் எந்த மாதிரி தலைப்பு வைப்பார்கள் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் கொஞ்சி குலாவியவாறு வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் இவர்கள் காதலிக்கிறார்கள் என ஒருசிலர் வதந்தியை பரப்பி விட்டனர்.

செம ரொமான்டிக்காக

செம ரொமான்டிக்காக

மேலும் சிலர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரமோஷன் என கூறி வந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்பொழுது செம ரொமான்டிக்காக இரண்டு அட்டகாசமான போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

Recommended Video

ஹரிஷ் கல்யாண் ❤️ பிரியா பவானி சங்கருடன் காதலா? குழப்பும் டுவிட் | Filmibeat tamil

"ஓ மணப்பெண்ணே "

விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா இணைந்து நடித்திருந்த "பெல்லி சூபுளு" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்த படத்திற்கு "ஓ மணப்பெண்ணே " என ரொமான்டிக்காக தலைப்பு வைத்திருக்கின்றனர்.

மறக்க முடியாத நினைவுகளை

மறக்க முடியாத நினைவுகளை

"ஓ மணப்பெண்ணே " படத்தின் அட்டகாசமான போஸ்டரை தென்னிந்தியாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கக்கூடிய நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பெல்லி சூபுளு படம் எனது வாழ்வில் மிகப்பெரிய சந்தோசத்தையும் மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்து திரை வாழ்க்கையை அற்புதமாக்கியது.

நீண்ட தூரத்திற்கு கொண்டு

நீண்ட தூரத்திற்கு கொண்டு

அதே போல "ஓ மணப்பெண்ணே " திரைப்படமும் உங்களின் இருவரின் திரை வாழ்க்கையையும் மிக நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லும் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைய எனது வாழ்த்துக்கள் என விஜய் தேவரகொண்டா தனது பாணியில் "ஓ மணப்பெண்ணே " பட போஸ்டரை வெளியிட்டதோடு தனது வாழ்த்துக்களையும் இவ்வாறு பரிமாறிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X