‘அர்ஜுன் ரெட்டி’க்கு இன்றோடு 32 வயசாச்சு… இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து !

சென்னை : இளம் பெண்களின் கனவு நாயகன் விஜய்தேவரகொண்டா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு அவரது ரசிகர்கள், நண்பர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குறிப்பாக பெண் ரசிகைகள் அவரது புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேடசாக வைத்து மெய் மறந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முதல் படம்

முதல் படம்

2011ம் ஆண்டு நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் விஜய் தேவகொரண்டா. இதையடுத்து, ஒரு சில திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது பெல்லி சூபுலு இந்த படத்தை அடுத்து தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இளசுகளை கவர்ந்தது

இளசுகளை கவர்ந்தது

2017ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி இவருக்கு மிகப்பெரிய புகழை வாரிக் குவித்தது. இந்த படத்தில் ஷாலினி பாண்டே இருவரும் காதலர்களாக நடித்தார்கள் என்பதை விட அப்படியே வாழ்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த படம் இளசுகளை கவர்ந்து பெரும் ஹிட்டடித்தது.

பாக்ஸ் ஆபிஸில் ஹிட்

பாக்ஸ் ஆபிஸில் ஹிட்

கீதா கோவிந்தம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த காதல் நகைச்சுவை பார்வையாளர்களுடன் சரியான முறையில் கொண்டு சேர்த்தது. இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக அமைந்து படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

இந்த படங்களின் வெற்றியை அடுத்து, தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக்கொண்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் தமிழ் ரீ மேக் படங்களால் தமிழ் ரசிகர்கள் மனங்களையும் வென்றார். இன்று விஜய்தேவரகொண்டா தனது 32வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X