விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே படத்தின் கதை இதுதானாமே... 40 நாள் மும்பை ஷூட்டிங் ஓவர்!
மும்பை: விஜய் தேவரகொண்டா இந்தியில் அறிமுகமாகும் படத்தின் கதை என்ன என்பது தெரிய வந்துள்ளது.
Recommended Video
தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர், கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நான்கு ஹீரோயின்கள்
இந்த படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி ரிலீஸ் ஆனது. இதில் அதில் நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படம் சரியாக ஓடவில்லை. அதற்கு விஜய் தேவரகொண்டா கதையில் தலையிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவரிடம் நஷ்ட ஈடுகேட்டிருந்தார். இதனால், விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் பாதியை திருப்பிக் கொடுத்ததாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாயின.

நடிகை சார்மி
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தை, புரி ஜெகநாத் இயக்குகிறார். இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர். இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை.

அனன்யா பாண்டே
பின்னர் அனன்யா பாண்டே ஒப்பந்தம் ஆனார். இவர், இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இந்தியில், ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடந்து 40 நாட்கள் நடந்தது. அனன்யா பாண்டேவுடன் விஜய்தேவரகொண்டா பைக்கில் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

பாக்ஸர் டிராமா
இந்நிலையில் இந்த படத்தின் மும்பை ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இது பாக்ஸர் டிராமா கதை. ஹீரோ விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடிக்கிறார். இதற்காக அவர் பயிற்சி பெற்றுள்ளார். ரம்யா கிருஷ்ணன் அவர் அம்மாவாக நடிக்கிறார். ரோனித் ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











