விஜய்தேவரகொண்டாவுடன் மாலத்தீவில் ராஷ்மிகா..வெளிச்சத்திற்கு வந்த காதல் விவகாரம்!

மும்பை : விஜய்தேவரகொண்டாவுடன் நடிகை ராஷ்மிகா மந்தானா மாலத்தீவு சென்ற போட்டோ இணையத்தில் வெளியாகி, ஹாட் டாப்பிக்காக உள்ளது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படமும் வசூலைவாரிக்குவித்தது.

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கியகாரணம்.

அட்டகாசமான முத்தகாட்சி

அட்டகாசமான முத்தகாட்சி

டியர் காம்ரேட் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடிக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் ஒரு லிப் லாங் காட்சியும் அட்டகாசமாக இடம் பெற்று இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

காதல் இல்லை

காதல் இல்லை

என்னத்தான் லவ் இல்லை என இவர்கள் கூறினாலும், அடிக்கடி இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

காதலருடன் மாலத்தீவில்

காதலருடன் மாலத்தீவில்

என்னத்தான் தனித்தனியாக வந்தாலும், ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா அபிதாப் பச்சனுடன் குட் பை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. மேலும், விஜய்யுடன் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வந்த ராஷ்மிகா ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

குஷி படத்தில்

குஷி படத்தில்

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். சிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X