Rashmika Mandanna Marriage: தேதி குறிச்சாச்சு.. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் எப்போ, எங்கே தெரியுமா?
சென்னை: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே ரகசியமாக காதல் செய்து வருவதாக ஏகப்பட்ட செய்திகள் வெளியாகின. ஆனால், இத்தனை ஆண்டுகளாக அதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவும் முடியாமல் அமைதி காத்து வந்த இருவரும் கடந்த அக்டோபர் மாதம் குடும்பத்தினர் மத்தியில் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டனர் என்றும் தை மாதத்தில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அனத படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டி உடன் காதல் ஏற்பட்ட நிலையில், நிச்சயமும் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது.

கன்னட திரையுலகில் இருந்து தெலுங்கு திரையுலகத்துக்குச் சென்ற ராஷ்மிகா அங்கே இருந்து தமிழ், இந்தி என தற்போது பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார்.
வெற்றியும் தோல்வியும்: இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடித்த சாவ்வா திரைப்படம் 800 கோடி வசூலை ஈட்டியது. தீபாவளிக்கு வெளியான தம்மா திரைப்படம் பெரிதாக வசூல் ஈட்டவில்லை. தெலுங்கில் வெளியான தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படம் ராஷ்மிகாவுக்கு வெற்றிப் படமாகவும் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டக் கூடிய படமாகவும் மாறியது. விஜய் தேவரகொண்டா நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கிங்டம் திரைப்படம் தோல்வியை தழுவியது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்: கடந்த அக்டோபர் மாதம் இருவரும் எளிமையான முறையில் நிச்சயம் செய்துக் கொண்டனர் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி பிரம்மாண்டமாக இருவரது திருமணம் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதய்ப்பூர் கோட்டை: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டனர் என்றும் உதய்பூரில் உள்ள பழமையான பிரம்மாண்ட கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனியாக ஹைதராபாத்தில் சினிமா பிரபலங்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











