அடுத்தடுத்த தோல்வி.. சமந்தாவின் மானத்தை காப்பாற்றிய குஷி..5 நாட்கள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குஷி திரைப்படம் செப்டம்பர் 1ம் ந் தேதி பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார் என பலர் நடித்துள்ளனர்.

Vijay Deverakonda and Samantha-starrer Kushi five days box office collection

குஷி: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து, நவீன் யெர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவிசங்கர் தயாரித்துள்ள, இப்படத்தை சிவா நிர்வாணா படத்தை இயக்கி உள்ளார். சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், திருமணமான பின் எதற்கு எடுத்தாலும் சண்டை பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் அவர்களது அதீத காதல் இவர்களை சேர்த்து வைக்கிறது என்பது தான் குஷி படத்தின் மொத்த கதை.

பக்கா கெமிஸ்ட்ரி: சமந்தா விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி இப்படத்தில் பயங்கரமாக ஒர்க் அவுட்டாகி உள்ளது. காதல், ரொமான்ஸ், லிப் லாக், படுக்கை அறை காட்சி என சகலமும் குஷி படத்தில் இடம் பெற்றுள்ளதால், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் மூன்றே நாட்களில் ரூ.70 கோடியை தாண்டிய இப்படம், 5து நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Deverakonda and Samantha-starrer Kushi five days box office collection

ரூ.1 லட்சம் பரிசு: விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு அதிக வசூலை அள்ளியத் திரைப்படமாக குஷி படம் மாறி உள்ளது. இந்த படம் குறித்து வசூலால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா. நேற்று நடந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு, குஷி பட வெற்றியை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டால்தான் தூக்கம் வரும் என்றார். எனவே ரூ.1 கோடியை, 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசளிக்க இருப்பதாக கூறியிருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், படிவ லிங்கை வெளியிட்டுள்ளார்.

மானத்தை காப்பாற்றிய குஷி: யசோதா, சாகுந்தலம் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் பல விமர்சனங்களை சந்தித்த நடிகை சமந்தாவின் மானத்தை குஷி படத்தின் மகத்தான வசூல் காப்பாற்றி உள்ளதால், சமந்தா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X