’ஓ சொல்றியா மாமா’ தந்த யோகம்.. விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஜோடி போட்ட சமந்தா.. பூஜை போட்டாச்சு!
ஹைதராபாத்: புஷ்பா படத்தில் "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா, அடுத்ததாக அந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் இந்த புதிய படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக போடப்பட்டது.

லைகர்
இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் மல்யுத்த வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

புதிய படம்
2011ம் ஆண்டு வெளியான நுவிலா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. பெலி சூப்புலு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2017ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டு இருக்கிறது.

பூஜை போட்டாச்சு
இயக்குநர் ஷிவ் நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கப் போகும் புதிய படத்திற்கான பூஜை இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக போடப்பட்டது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

சமந்தா ஜோடி
நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருப்பார். கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் லீடு ரோலில் நடித்திருந்தாலும், பத்திரிகையாளர்களாக கதையை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தான் நகர்ந்தி செல்வார்கள். இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போவது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஓ சொல்றியா மாமா தந்த வாய்ப்பு
புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்கின்றனர். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட வேண்டும் என்கிற ஒப்பந்தம் போடும் போதே, அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்கிற ஒப்பந்தத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் போட்டுள்ளார்கள் என்கின்றனர்.

காஷ்மீரில் நடக்கும் கதை
இந்த படமும் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்க உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் தான் படமாக்கப்பட உள்ளதாகவும், காஷ்மீரை மையமாக கொண்ட கதை தான் மையக்கரு என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











