சமந்தாவுக்காக இத்தனை மாதங்கள் காத்திருந்த விஜய் தேவரகொண்டா.. வெளிநாட்டுக்கு செல்லும் குஷி படக்குழு!
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட குஷி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பமாக உள்ளது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகையர் திலகம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா இணைந்து நடித்து இருந்தார்.
அதன் பின், மீண்டும் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி போட்டு நடிக்க குஷி படத்தில் கமிட் ஆனார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு அரிய நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குஷி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவுடன்
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் படத்தில் பத்திரிகையாளர்களாக சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருப்பார்கள். ஆனால், அந்த படத்தில் அவர்களுக்கான வெயிட்டேஜ் அந்த அளவுக்கு இருந்திருக்காது. இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து குஷி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

காஷ்மீரில் தொடங்கிய குஷி
கடந்த ஆண்டு குஷி படம் தொடங்கிய நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில மாதங்களுக்கு பிறகு குஷி படத்தின் படப்பிடிப்பு தொடராமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மயோசிடிஸ் பாதிப்பு
யசோதா, சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்த நடிகை சமந்தா அடுத்ததாக குஷி படத்தில் நடிக்கத் தொடங்கிய நிலையில், திடீரென மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 8 மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சமந்தா குஷி படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், குஷி படத்தின் படப்பிடிப்பையே படக்குழுவினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

காத்திருந்த விஜய் தேவரகொண்டா
நடிகை சமந்தா நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில இந்தி படங்களில் இருந்தும் தமிழ் படங்களில் இருந்தும் கிடைத்த வாய்ப்புகள் பறிபோன நிலையிலும், குஷி படத்தில் சமந்தா நடித்தால் தான் நல்லா இருக்கும், அவர் குணமாகி வரட்டும் என விஜய் தேவரகொண்டா பொறுமையுடன் காத்திருந்ததாக கூறப்படுகிறது. லைகர் படத்தின் தோல்விக்கு பிறகும் விஜய் தேவரகொண்டா அவசரப்படவில்லை.

நார்வேயில் ஷூட்டிங்
இந்நிலையில், மீண்டும் குணமாகி வந்த நடிகை சமந்தா பாலிவுட்டில் சிட்டாடல் வெப்சீரிஸ் மற்றும் குஷி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார். காஷ்மீரில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது நார்வேயில் தொடங்கி உள்ளதாகவும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா பங்கேற்க கிளம்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நார்வேயில் 2 பாடல்களின் ஷூட்டிங்கும் சில காட்சிகளும் 15 நாட்களுக்கு படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவ நிர்வாணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











