twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆற்றில் கவிழ்ந்த கார்.. சமந்தாவுக்கு என்ன ஆச்சு.. படக்குழு விளக்கம் !

    |

    சென்னை : குஷி படப்பிடிப்பில் நடிகை சமந்தாவின் கார் ஆற்றில் கவிழ்ந்ததாக வந்த செய்தி பற்றி படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

    விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் 'குஷி' படத்தில் முதன்முறையாக இணைந்துள்ளனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. குஷி படத்தை டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை போல் எந்த நடிகருக்கும் நடந்ததில்லை..தயாரிப்பாளர் ரவீந்தர் பகீர்சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை போல் எந்த நடிகருக்கும் நடந்ததில்லை..தயாரிப்பாளர் ரவீந்தர் பகீர்

    குஷி

    குஷி

    சமந்தா நடிக்கும் குஷி திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஹ்ரிதயம் படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

    விஜய் தேவரகொண்டா, சமந்தா

    விஜய் தேவரகொண்டா, சமந்தா

    விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் முதன்முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. காதல் கதைக்களத்தில் ரொமான்டிக் கதையாக குஷி திரைப்படம் உருவாகி உள்ளது. காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது.

    கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து?

    கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து?

    இந்நிலையில் குஷி படப்பிடிப்பின் போது, விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்ததாகவும், இதில் இருவரும் காயமடைந்ததாக செய்திகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இருவரின் ரசிகர்களும் பெரும் பதற்றமடைந்தனர். இந்நிலையில் இந்த விபத்து செய்தியை படக்குழு மறுத்துள்ளது.

    வதந்தி

    வதந்தி

    விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் படப்பிடிப்பில் காயமடைந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தியில் உண்மையில்லை வெறும் வதந்தி. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு மொத்த படக்குழுவும் ஹைதராபாத்திற்கு பத்திரமாகத் திரும்பி விட்டோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Vijay Deverakonda and Samantha were injured while shooting ?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X