யாஷிகாவின் பிறந்த நாள் பரிசு.. விஜய் தேவரகொண்டாவின் காமன் டிபி.. ரசிகர்கள் குஷி !

சென்னை :விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பரிசாக காமன் டிபி ஒன்றை வெளியிட்டு அசத்தினார் யாஷிகா ஆனந்த்

Recommended Video

Vj Manimegalai Surprise Birthday Celebration | Manimegalai Hussain

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவன் தான் உத்தமன், ராஜ பீமா போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார் யாஷிகா .

Vijay deverakonda birthday common dp

முன்னாடி எல்லாம் ஒரு நடிகர் படம் வெளிவந்தால் மற்றொரு நடிகர் படம் போட்டியாக வெளியிடுவது வழக்கம் வரும். திரையரங்குகள் சும்மா சூடு பிடிக்கும். வசூல் வேட்டையில் அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு படம் பார்க்க செல்வது வழக்கம் . அதில் என் ஆள் தான் செம, என் ஆள் நடிப்பு தான் செம, என சண்டை சச்சரவும் ஏகப்பட்ட பிரச்சனை வரும்.

இன்று நிலைமை அப்படி அல்ல, நடிகர் சிவகார்த்திகேயன் சக நடிகர்களின் முன்னோட்டத்தை ட்விட்டரில் வெளியிடுவதும். இவருடையதை மற்ற நடிகர்கள் வெளியிடுவதும் என போட்டியை தாண்டி ஆரோக்கியமான உறவு திரைத்துறையில் தற்போது நிலவி வருகிறது.

சிம்பு இசை அமைத்த படத்தில் சந்தானம் ஹீரோவா நடித்ததும். அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தந்து வாழ்த்தியதும் கூட உதாரணமாக சொல்லலாம். அந்த அளவுக்கு இன்று ரசிகர்களிடம் அன்பு சமமாகத்தான் உள்ளது.

Vijay deverakonda birthday common dp

அந்த வகையில் நடிகர்களின் பிறந்த நாளை ரசிகர்கள் மட்டுமே கொண்டாடும் காலம் தாண்டி சகநடிகர்களும் அதை கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது . நடிகர் பிறந்த நாள் அன்று Common DP அதாவது பொதுவான ஒரு படம் வடிவமைப்பு செய்து ட்வீட் செய்வது போன்றவை ட்ரெண்டாகிவிட்டது.

அதன் தொடர்ச்சியான சமீபத்தில் நம்ம தல அஜித் அவரின் பிறந்த நாள் Common DP வெளிவந்து அனைவரும் அதனை டிபியாக வைத்து தெறிக்க விட்டனர். அதை தொடர்ந்து தற்போது கீதா கோவிந்தம் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு Common Dp வெளியிட்டுள்ளனர். அதனை சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் யாஷிகா வெளியிட்டு உள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் .

Vijay deverakonda birthday common dp

இந்த மாதிரி ஒருத்தர் மேல் ஒருத்தர் காட்டும் அக்கறையில் வியாபாரம் தாண்டிய அன்பை பார்க்க முடிகிறது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியான இன்ஸ்டா, ட்விட்டர் பக்கங்களை முடக்க ஒரு தனி டீம் அமைத்துள்ளார் என்று பேசப்படுகிறது, அவரை பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கும் இணையதளங்களை கடுமையாக எச்சரித்துள்ளார். இதற்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவிற்கு முன்னணி நடிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X