twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அந்த நடிகை' என் தங்கச்சி போன்றவர்: விஜய் தேவரகொண்டா

    By Siva
    |

    Recommended Video

    Actor Vijay Devarkonda: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகனாகப் போவது உண்மையில்லை- வீடியோ

    ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகனாகப் போவதாக செய்திகள் வெளியான நேரத்தில் அவர் வேறு விதமாக பேசியுள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் விஜய், நிஹாரிகா இடையே என்ன உறவு என்பது தெரிய வந்துள்ளது.

     தனுஷ், நயன்தாரா ரூட்டை பிடித்த அமலா பால் தனுஷ், நயன்தாரா ரூட்டை பிடித்த அமலா பால்

    நிஹாரிகா

    நிஹாரிகா

    திருமணம் என்று பேச்சு கிளம்பிய நேரத்தில் விஜய் தேவரகொண்டா நிஹாரிகா நடித்த சூர்யகாந்தம் பட விழாவில் கலந்து கொண்டார். படத்தை பார்த்து வெற்றி அடையச் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அவர் அன்பு கோரிக்கை விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் நிஹாரிகா பற்றி பேசினார்.

    தங்கை

    தங்கை

    நாக பாபு சார் அமெரிக்காவில் உள்ளார். வருண் தேஜ், சரண் அண்ணாவும் அமெரிக்காவில் உள்ளனர். அதனால் ஒரு அண்ணனாக நிஹாரிகா பட விழாவில் கலந்து கொண்டுள்ளேன். கீத கோவிந்தம் படத்தில் நான் நாக பாபு சாரின் மகனாக நடித்தேன். அதில் இருந்து எங்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றார் விஜய் தேவரகொண்டா.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை அதனால் கொஞ்ச காலம் நடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக தயாரிப்பில் ஈடுபடுவேன் என்றார் நிஹாரிகா. இந்நிலையில் நிஹாரிகா, விஜய் திருமணம் குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    பாவம்

    பாவம்

    நிஹாரிகா நடித்த முதல் தெலுங்கு படமான ஒக்க மனசு வந்த இடம் தெரியாமல் போனது. அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ஹேப்பி வெட்டிங் படமும் ஓடவில்லை. இந்நிலையில் அவர் நடித்த மூன்றாவது படமான சூர்யகாந்தமும் சரியாக ஓடவில்லை.

    English summary
    Vijay Deverakonda is considering actress Niharika Konidela as his younger sister.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X