Rashmika: ராஷ்மிகா வரப்போறாங்க.. சீரியல் பல்பு செட்டில் ஜெகஜோதியாய் மின்னும் விஜய தேவரகொண்டா வீடு!
ஹைதராபாத்: ஒட்டுமொத்த இந்தியா சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் காத்திருப்பதே நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணத்துக்குத்தான். உதய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்டமாக இவர்கள் திருமணம் நடைபெற போகிறது. இந்நிலையில், திருமணத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் பந்தக்கால் நட்டு பந்தல் போட்டு, சீரியல் பல்பு செட்டெல்லாம் போட்டு வீடே மின்னொளியில் ஜெகஜோதியாக ஜொலிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டிக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நிச்சயமும் செய்துக் கொண்டனர். ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அந்த திருமணம் நின்று போனது.

அதன் பின்னர், நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகில் இருந்து மூவ்வாகி தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
1000 கோடி ஹீரோயின்: கீதா கோவிந்தம் படத்துக்குப் பிறகு நேஷ்னல் கிரஷ் என்கிற பட்டத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அல்லு அர்ஜுன், சல்மான் கான், ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் என டாப் நடிகர்களுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து 1000 கோடி வசூல் செய்த பல படங்களில் நடித்து 1000 கோடி ஹீரோயினாக மாறியுள்ளார்.
ரகசிய காதல்: விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர். ஆனால், அவர்களது காதல் கதை பல ஆண்டுகளுக்கு முன்பே அம்பலமானாலும் இருவரும் அதை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. இந்நிலையில், வரும் பிப்ரவரி 26ம் தேதி இருவரும் உதய்பூரில் திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர்.
ஜொலிக்கும் விஜய் தேவரகொண்டா வீடு: உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறும் திருமணத்திற்கு அம்பானி முதல் பல பிரபலங்கள் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மார்ச் 4ம் தேதி பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் ரிசப்ஷன் நடைபெறும் என்றும் கூறுகின்றனர். நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திருமண ஏற்பாடுகளை செய்ய அடிக்கடி மும்பைக்கும் உதய்பூருக்கும் பறந்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் வீடு முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன.


Click it and Unblock the Notifications